மனிதனுக்கு பல்வேறு உறுப்புக்களின் பயன்பாடுகள்
அவசியமாகவிருந்தாலும் அவனுடைய கண் மூலமாகவே இந்த உலகத்தைப் பார்க்கின்றான். அதன்மூலமாக
வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியடைகின்றான் அவை இல்லாமல் போனால் எவ்வாறு இருக்கும்.
சிலருக்கு ஒரு கண் மட்டும்
அடிக்கடி துடிக்கும். அவ்வாறு துடிக்கும் போது,
ஒருசில மூடநம்பிக் கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது.
அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித்
தால், நல்லது நடக்கும், அதுவே
பெண்களுக்கென்றால் தீமை ஏற்படும் என்றும்,
ஆண்களுக்கு இடது கண் துடித்தால்
கெட்டது நடக்கப்போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது
நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில்
இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று
தான் சொல்ல வேண்டும்.
ஆம், நல்லது கெட்டது
நடப்பதற்கும், கண்களுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட
வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல்,
குருட்டுத்தனமாக பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த
மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உடலில்
ஒருசில பிரச்சனைகள் உள்ளது என்பதற்கான அறிகுறியாகும்.
அதுமட்டுமல்லாமல், கண்கள் துடிப் பதற்கு
“மயோகிமியா” (myokymia) என்று பெயர். இத்தகைய
கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம்
ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை,
அதிகமாக காப்ஃபைன் உட்கொள்ளுதல் மற்றும் பல காரணங்களாகும்.
சிலருக்கு கண் துடிப்பான து
ஒரு வாரம் அல்லது ஒரு
மாதம் கூட இருக்கலாம். சரி,
இப்போது இந்த கண் துடிப்பு
ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பட்டியலிட்டுள்ளோம்.
அதைப்படித்து தெரிந்துகொண்டு, கண் கள் துடித்தால்
என்ன செய்ய வேண்டுமோ, அதை
செய்து கண் துடிப்பில் இருந்து
விடுபடுங்கள்.
மன அழுத்தம்:
மன அழுத்தமானது அதிகம்
இரு ந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பி
க்கும். எனவே மன அழுத்ததைக்
குறைக்கும் செயல்களில் ஈடுபட் டால், அடிக்கடி
கண்கள் துடிப் பதை தவிர்க்கலாம்.
தூக்கமின்மை:
மன அழுத்தம் அதிகம்
இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். இவ்வாறு சரியான தூக்கம்
இல்லாவிட்டால், கண்களானது துடிக்கும்.
கண்களுக்கு சிரமம்:
கண்களுக்கு அதிகப்படியான சிரமத்தைக் கொடுத்தாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும்.
உதாரணமாக, படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால்,
அப்போது கண்களை பரிசோதித்து, அதற்கு
கண்ணாடிகளை போடாமல், சிரமப்படுத்தி அப்படியே படித்து கண்க ளுக்கு
சிரமம் கொடுத்தாலும், கண்கள் துடிக்கும். மேலும்
நீண்ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது
மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள்
களைப்படைந்துவிடும். இதனால்
கண்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்க ஆரம்பிக்கும்.
ஆகவே
கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும்
போது, சரியான கண்ணாடிகளை அணிந்து
கொண்டு பயன்படுத்தினால், கண் துடிப்பில் இருந்து
விடுபடலாம்.
காப்ஃபைன்:
அதிகமாக காப்ஃபைன் உள்ள
பொருட்களான கோப்பி, டீ போன்றவற்றை அருந்தினாலும்,
கண்கள் துடிக்க ஆரம்பிக்கும்.
எனவே இத்தகைய பொரு ட்களை
அதிகம் பருகுவதை தவிர்ப் பது நல்லது.
ஆல்கஹால்:
ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம்
உள்ளவர்களுக்கு, கண்கள் துடிக்கும். ஆகவே
ஆல்கஹாலை அதிகம் பருகாமல், மருந்து
போன்று எடுத்துக் கொள்வது நல்லது.
கண் வறட்சி:
கண் வறட்சியினாலும், கண்கள்
துடிக்க ஆரம்பிக்கும். போதிய தண்ணீர் பருகாமல்
இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம்
இருப்பது, காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம்
உட்கொள்வது, மன அழுத்தம், சோர்வு
போன்றவற்றால் கண்களானது வறட்சியடைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை
தவிர்த்தால், கண் வறட்சியில் இருந்து
விடுபட லாம்.
ஊட்டச்சத்து குறைபாடு:
சில ஆய்வுகள் உடலில்
ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்களில் உள்ள தசைகள் துடிக்க
ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும்
மக்னீசியம் குறை பாடு இருந்தால்,
கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே
சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைகளை
மேற்கொண்டால், கண்கள் துடிப்பதை தவிர்க்கலாம்.
அலர்ஜி:
சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும்.
கண் அலர்ஜிகளான கண்களில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப்பாகி கண்ணீர்
வடிதல் போன்றவற்றின் போது, கண்களை தேய்த்தால்
வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து,
கண்களை துடிக்க வைக்கும். ஆகவே
கண் அலர்ஜி இருந்தால், அப்போது
தேய்க்காமல், கண் மருத்துவரை அணுகி,
சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து
விடுபடலாம்.
ConversionConversion EmoticonEmoticon