மனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா?

 மனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால், மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்பது இல்லை, கருவறையில் ஒரு கரு உருவாகும் போது நிற மூர்த்தங்க ள் (Chromosomes) தீர்மா னிக்கிறது.

 XY நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது ஆண் குழந்தையாகவும், XX நிறமூர் த்தங்கள் சேர்ந்தால் அது பெண் குழ ந்தையாகவும், XXY அல்லதுXYY கருவில் சேர பெற்றால் அது மூன்றாம் பாலினமாக குழந்தை பிறக்கிறது. இது மருத்துவ ரீதியான உண்மை.ஒரு சில சமயங்களில் குழந்தை பிறந்த பின்னும் ஹோர் மோன்ஸ் ஏற்ற தாழ்வுகள் உடம் பில் ஏற்பட்டால் சில நேரம் XY நிறமூர்த்தங்கள் கூட மூன்றாம் பாலினமாக மாறலாம்.மூன்றாம் பாலினத் தில் நாம் தற்போது அலி பற்றிய கட்டுரையை தான் படித்து கொண்டு இருக் கிறோம்.

திருநங்கை எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாள ப்படுத்தப்பட்டு பின் னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்க ளாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.
பலருக்கு உள்ள பொதுவான சந்தேகம் திரு நங்கைகள் பிறக்கும் போது ஆண்குறியுடன் பிறப்பார்களா இல்லை பெண் குறியுடன் பிறப்பார்களா என்பது. திருநங்கை என்பவள் ஆண் குறிகொண்ட குழந்தையாகத்தான் பிறக்கிறாள். ஆனால் அந்த குழந்தைக்கு தெரியாது தன் உடலில் பெண்ணிற்கான குணா திசியங்கள், நிறமூர்த்தங்கள் இருக்கிறது என்று, அந்த குழந்தை வளர வளர அந்த ஹோர் மோன்ஸ், நிறமூர்த்தங்களின் செயல்பா டு வெளிப்பட ஆரம்பிக்கு ம்.

 திருநங்கையான அந்த சிறுவனுக்கு 13வயது அல்லது பருவ வயது (ஹோர் மோன்கள் சுரக்கும் தருணம்) ஆரம் பிக்கும் பொழுது உடலில் தன்னையே அறியாமல் பெண்மைக்கான குணாதிசயங்களை உணர முடியும். பெண்களை போல பேசுவது, பெண்களை போல நடப்பது,பெண்களை போல செயல்கள் புரிவது போன்றவை மனதளவிலே அரும்புவிட ஆரம்பிக்கிறது. அப்போது தான் அந்த சிறு வனுக்கு பாலியல் தடுமாற்றம் ஆரம்பிக்கும் தருணம். அந்த சிறுவன் தான் ஆண்மகனா இல்லை பெண்மகளா என்று தனுக்குள் சந்தே கம் ஏற்படும்.

 அந்த சிறுவன் தன்னுடன் உள்ள சக சிறுவர்களைபோல தன்னை ஆணாக உணராமல் பெண் குழந்தையாக உணரும். அந்த குழந்தை படும்பாட்டை, குழப்பத்தை உணராத சுற்றும் அந்த குழந்தையை கேலியும் கிண்டலும் புரிந்து மனதை காயபடுத்துவர். அந்த சுழலில் தனுக்கு உண்டான பாலியல் மனமாற்றம் பற்றி என்ன செய்வது யாரிடும் போய் இதை கூறுவது என்பதுகூட புரியாது, தெரியாது. சொன்னா ல் யாரும் தன்னை தவறாக நினை த்துவிடுவார்களோ என்று மனதிற்குள் பயந்து அழுது அந்த குழந்தை வாழும் அத்தருணம் மிக கொடுமையானது.

 163 நாடுகளில் திருநங்கைகளை அங்கிகாரம் செய்துள்ளனர், இவை பெரும்பாலும் வளர்ந்த மற்றும் வள ரும் நாடுகள் ஆகும்.
உடல் ஊனம் என்றால் குழந்தை பிறந்த பின் தெரிந்து கொள்ளலாம், பாலியல் ஊனத்தை வெளிப்படையாக பெரியவர்களே தயங்கி பேசும் போது அந்த சிறுவனால் தான் ஆண் இல்லை என்றும் பெண்மை உணர்வுகள் கொண்ட திருநங்கை என்பதை எப்படி கூற முடியும், அப்படி கூறினால் வீட்டில் உள்ள பெற்றோர் குழந்தை விளையாட்டாக கூறுகிறது என்று சும்மா விடுவர் இல்லை யேல் அந்த குழந்தையை அடித்து துன்புறுத்தி மாறச்சொல்லுவார்கள், எப்படி மாற்ற முடியும் தன் உள்ளே இயற்கையாக உருவான குணாதிசயங்களை சற்று சிந்தியுங்கள்

நன்றிதமிழ்காரன்
Previous
Next Post »

More News