பிறரை நம்பதை விட நீ உன்னை நம்பி நட


தன் கையே தனக்கு உதவி
நெல் வயலில் காடை ஒன்று முட்டையிட்டுக் குஞ்சு களைப் பொரித்தது. அந்த வயலில் நெற்கதிர்கள் நன்கு முற்றி அறுவடைக்குத் தயாராகி நின்றன.

வயலின் சொந்தக்காரன் எப்பொழுது வேண்டுமானாலும் அறுவடைக்கு வரலாம் என்று நினைத்தது காடை. தன் குஞ்சுகளைப் பார்த்துநான் இல்லாத போது யார் இங்கே வந்து என்ன பேசினாலும் என்னிடம் சொல்ல வேண்டும் என்றது.


குஞ்சுகளுக்கு உணவுடன் மாலையில் திரும்பியது காடை. நடுக்கத்துடன் குஞ்சுகள், ‘அம்மா வயலின் சொந்தக்காரர் தன் மகனுடன் இங்கு வந்தார். ‘மகனே நெல் நன்றாக விளைந்துள்ளது. நம் நண்பர்களையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் அழைத்து வந்து நாளையே அறுவடை செய்ய வேண்டும்என்றார். மகனும் சரி என்றான். இருவரும் சென்று விட்டார்கள். நாம் இனி இங்கே இருப்பது ஆபத்து. எங்காவது சென்றுவிட வேண்டும்என்றன.

குஞ்சுகளே! அஞ்ச வேண்டாம். நாளை நமக்கு எந்த ஆபத்தும் வராது. நாளை இங்கே என்ன நடக்கிறது என்பதைக் கேட்டு என்னிடம் சொல்லுங்கள்என்றது காடை.

மறுநாள் மாலை தன் குஞ்சுகளுக்கு உணவுடன் வந்தது காடை.

அம்மா வயலின் சொந்தக்காரரும் மகனும் இங்கே வந்து காத்திருந்தார்கள். நண்பர்களும் அக்கம் பக்கத்தவர்களும் வரவில்லை. தன் மகனிடம் அவர்நம் உறவினர்களை நாளை அறுவடைக்கு நான் வரச் சொன்னதாகச் சொல்என்றார். இருவரும் சென்று விட்டார்கள். நாளை கண்டிப்பாக இங்கே அறுவடை நிகழும். இப்பொழுதே நாம் எங்காவது சென்று விட வேண்டும்என்றன குஞ்சுகள்.

அஞ்ச வேண்டாம். நாளை அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்டுச் சொல்லுங்கள்என்றது காடை.

வழக்கம் போல மாலை நேரத்தில் உணவுடன் தன் குஞ்சுகளிடம் வந்தது அது.

அம்மா உறவினர்களுக்காக நிலத்தின் சொந்தக்காரரும் மகனும் நீண்ட நேரம் காத்திருந்தார்கள் யாரும் வரவில்லை. மகனே! பிறரை நம்பிப் பயன் இல்லை. அரிவாள்களைக் கூர்மைப்படுத்தித் தயாராக வை. நாளை நாமே வந்து அறுவடை செய்வோம் என்றார். இருவரும் சென்றுவிட்டார்கள்என்றன குஞ்சுகள்.

குழந்தைகளே! இனி நாம் தாமதிக்கக் கூடாது. உடனே பாதுகாப்பான வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டும். எப்பொழுது ஒருவன் தன் வேலையைத்தானே செய்ய முடிவுசெய்துவிட்டானோ அந்த வேலை முடிந்து விடும்என்ற காடை தன் குஞ்சுகளுடன் அங்கிருந்து வேறு இடத்திற்குச் சென்றது.
Previous
Next Post »

More News