பரபரப்பான
லீக் போட்டியில் ரகானேவின் அதிரடி அரைச் சதம்
கைகொடுக்க ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில்
அசத்தல் வெற்றிபெற்றது. இதன் மூலம் ‘பிளே
ஒப்’ வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.
கடைசி ஓவர் வரை போராடிய
புனே அணி மீண்டும் வீழ்ந்தது.
ஜெய்ப்பூரில்
நேற்று முன்தினம் இரவு நடந்த பிரிமியர்
கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில்
ராஜஸ்தான் புனே அணிகள் மோதின.
நாணயச் சுழற்சியில் வென்ற புனே தலைவர்
ஆரோன் பின்ச் துடுப்பாட்டத்தை தேர்வு
செய்தார்.
புனே அணிக்கு ஆரோன் பின்ச்,
ரொபின் உத்தப்பா அசத்தல் துவக்கம் கொடுத்தனர்.
ராஜஸ்தான் பந்து வீச்சை பதம்பார்த்த
இவர்கள், பவுண்டரிகளாக விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 97 ஓட்டங்கள்
சேர்த்த போது கெவான் கூப்பர்
பந்தில் பின்ச் (45) போல்டானார்.
உத்தப்பா
அபாரம் (திரிவேதி வீசிய 14 வது ஓவரில் அடுத்தடுத்து
இரண்டு பவுண்டரி அடித்த உத்தப்பா, அரைச்
சதம் அடித்தார். யுவராஜ் சிங் (15), திரிவேதியிடம்
சரணடைந்தார். ரொபின் உத்தப்பா (54), ‘ரன்
அவுட்’ ஆனார். அடுத்து வந்த
மாத்யூஸ் (18) பெரிய அளவில் சோபிக்கவில்லை.
கூப்பர் பந்தில் இரண்டு சிக்சர்
அடித்த மிட்சல் மார்ஷ், பால்க்னர்
வீசிய ஆட்டத்தின் கடைசி பந்தையும் சிக்சருக்கு
அனுப்பினார். புனே அணி 20 ஓவரில்
4 விக்கெட்டுக்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. மின்சல் மார்ஷ் (35) ஆட்டமிழக்காமல்
இருந்தார்.
வலுவான
துவக்கம் :
சவாலான
இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு தலைவர் டிராவிட்
ரகானே சேர்ந்து வலுவான அடித்தளம் அமைத்தனர்.
புனே பந்து வீச்சை சிதறடித்த
இவர்கள், அதிவிரைவாக ஓட்டங்கள் சேர்த்தனர். ராகுல் சர்மா பந்தை
சிக்சருக்கு அனுப்பிய டிராவிட் அரை சதம் கடந்தார்
மெத்தியூஸ் ‘வேகத்தில்’ டிராவிட் (58) அவுட்டானார்.
தனது அபார ஆட்டத்தை தொடர்ந்த
ரகானே, மெத்தியூஸ் ஓவரில் ஒரு சிக்சர்
2 பவுண்டரி அடித்து அரை சதம்
எட்டினர். வொட்சன் தன் பங்கிற்கு
ஒரு பவுண்டரி அடிக்க இந்த ஓவரில்
மட்டும் 21 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. பார்னல் பந்தில் வெட்சன்
(5) போல்டானார். புவனேஸ்வர் குமார் வேகத்தில் ரகானே
(67) ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் ஹட்ஜ்
(4) வெளியேற பதட்டம் ஏற்பட்டது. அடுத்து
வந்த சாம்சன், பார்னல் ஓவரில் 2 பவுண்டரி
அடித்து நம்பிக்கை தந்தார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 5 ஓட்டங்கள்
தேவைப்பட்டன. பார்னல் பந்து வீசினார்.
முதல் பந்தில் ஒரு ஓட்டம்.
இரண்டாவது பந்தில் சாம்சன் (10) அவுட்டானார்.
தொடர்ந்து பின்னி ஒரு ‘சூப்பர்’
பவுண்டரி அடிக்க ராஜஸ்தான் அணி
19.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 182 ஓட்டங்கள் எடுத்து வெற்றிபெற்றது. இதன்
மூலம் சொந்த மண்ணில் (ஜெய்ப்பூர்)
தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. பின்னி (32), பால்க்னர் (3) ஆட்மிழக்காமல் இருந்தனர்.
ஆட்ட நாயகன் விருதை ரகானே
வென்றார்.
ConversionConversion EmoticonEmoticon