செய்வாய் கிரகத்தில் நீர் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


செவ்வாய்க் கிரகத்தில் பனிக்கட்டி நிலையில் பெருமளவு நீர் உள்ளதாக ஆய்வில் தகவல்
செவ்வாய் (ணிars) சூரியக் குடும்பத்தில் உள்ள ஒருகோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஒட்சைட் இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது. இதனாலேயே இதற்குச் செவ்வாய் என்ற பெயர் ஏற்பட்டது.

ஒரு புவிசார் கோளான இதன் மேற்பரப்பு சந்திரனில் உள்ளதுபோல் கிண்ணக் குழிகளையும், புவியில் உள்ளது போன்ற எரிமலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், பனிமூடிய துருவப் பகுதிகளையும் கொண்டது. செவ்வாயின் சுழற்சிக்காலமும், பருவ மாற்றங்களும் புவிக்கு உள்ளதைப் போன்றவையே. சூரிய மண்டலத்துள் மிக உயரமான ஒலிம்பசு மலையும், மிகப்பெரிய செங்குத்துப் பள்ளத்தாக்குகளும் ஒன்றாக மரினர் பள்ளத்தாக்கும் செவ்வாயிலேயே உள்ளன.



1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அண்மையாக மரினர் - 4 வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க்கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினர். கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன. இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர்.

மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத் தோற்றம் என விளக்கினர். ஆனாலும், ஆளில்லாப் பயணங்களின் மூலம் திரட்டப்பட்ட நிலவியற் சான்றுகள், ஒரு காலத்தில் செவ்வாயில் பெருமளவு நீர் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.

இது, போபோசு, டெய்மோசு என்னும் இரண்டு நிலவுகளைக் கொண்டுள்ளது. இவை சிறிய, ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை செவ்வாயின் டிரோசான் சிறுகோளான 5201 யுரேக்காவைப்போல் இவை செவ்வாயின் ஈர்ப்பினால் கவரப்பட்ட சிறு கோள்களாக இருக்கலாம்.

செவ்வாயின் விட்டம் புவியின் விட்டத்தின் அரைப் பங்கு அளவு கொண்டது. இதன் அடர்த்தி புவியினதைக் காட்டிலும் குறைவானது. செவ்வாய் புவியின் கனவளவின் 15%க்குச் சமமான கனவளவையும், புவியின் திணிவின் 11%க்குச் சமமான திணிவையும் கொண்டது. இதன் மேற்பரப்பின் பரப்பளவு, புவியின் உலர் நிலப்பகுதியின் பரப்பளவைக் காட்டிலும் சற்றே குறைவானது. செவ்வாய் புதன் கோளிலும் பெரியதும் திணிவு கூடிய தும் ஆகும். ஆனால், புதன், செவ்வாயிலும் கூடிய அடர்த்தி கொண்டது.

செவ்வாய், சிலிக்கன், ஒட்சிசன், உலோகங்கள், இன்னும் பிற பாறைகளை உருவாக்கும் தனிமங்களைக் கொண்ட கனிமங்களாலான ஒரு புவிசார் கோள். செவ்வாயின் மேற்பரப்பு பெரும்பாலும் தோலெயிட் டிக் பசாற்றுக் கற்களால் ஆனது எனினும் சில பகுதிகள் பொதுவான பசாற்றுக் கற்களிலும் கூடிய சிலிக்காச் செறிவு கொண்டது.

இது புவியின் எரிமலைப் படிகப் பாறையைப் போலவோ, சிலிக்காக் கண்ணாடியைப் போலவோ இருக்கக் கூடும். குறைவான ஒளிதெறிதிறன் கொண்ட பகுதிகளில் சரிவு வகை களிற்கற் செறிவுகளும், குறித்த ஒளிதெறிதிறன் கொண்ட வட பகுதியில் வழமையான செறிவில் தகட்டுச் சிலிக்கேற்றுகளும், உயர்-சிலிக்கன் கண்ணாடியும் காணப்படுகின்றன. தென்பகுதி மேட்டு நிலங்களின் சில பகுதிகளில கண்டறியக்கூடிய அளவில் உயர்-சிலிக்கன் பைரொட்சின்கள் காணப்படுகின்றன.

ஆங்காங்கே ஏமட்டைட், ஆலிவைன்கள் என்பனவும் உள்ளன.

பீனிக்சு இறங்குகாலம் அனுப்பிய தகவல்கள், செவ்வாயின் மண் காரத்தன்மை கொண்டது எனவும், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம், குளோரைட் போன்ற தனிமங்களைக் கொண்டது எனவும் காட்டுகின்றன. புவியிலுள்ள தோட்டங்களில் காணப்படும் இவை தாவர வளர்ச்சிக்கு இன்றியமையாதவை. இறங்குகலச் சோதனைகளின் படி மண் பி. எச். 8.3 கொண்டதுடன், பேர்குளோரேட் உப்புக்களையும் கொண்டது எனத் தெரிகிறது.

செவ்வாயில் கீறல்கள் பொதுவாகக் காணப்படுவதுடன், கிண்ணக் குழிகள், பள்ளத்தாக்குகள் என்பவற்றின் சரிவுகளில் புதிய கீறல்களும் தோன்றுகின்றன. முதலில் கடுமையான நிறத்துடன் காணப்படும் இக் கீறல்கள் காலம் செல்லச் செல்ல மங்கலான நிறத்தை அடைகின்றன. சில வேளைகளில் சிறியனவாகத் தோன்றும் இக் கீறல்கள் பின்னர் பல நூறு மீட்டர்களுக்கு விரிவடைகின்றன. இக்கீறல்கள் தமது பாதையில் காணும் பாறைகள், பிற தடைகள் போன்றவற்றின் விளிம்போடு செல்வதையும் காண முடிகிறது.

தாழ்வான பகுதிகளில் குறைந்த நேரத்துக்கு நீர் திரவ நிலையில் இருக்கக் கூடுமாயினும், குறைந்த வளியமுக்கம் காரணமாகச் செவ்வாயின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பது சாத்தியம் இல்லை. இரண்டு துருவங்களிலும் காணப்படும் பனி மூடிகள் பெரும்பாலும் நீரினால் ஆனதாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. தென் துருவப் பனி மூடியில் உள்ள பனிக்கட்டி உருகினால் உருவாகக்கூடிய நீர் செவ்வாயின் முழு மேற்பரப்பையும் 11 மீட்டர்களுக்கு மூடுவதற்குப் போதுமானதாக இருக்கும்.

செவ்வாயில் தெரியும் நிலத் தோற்றங்கள், ஒரு காலத்தில் அதன் மேற்பரப்பில் நீர்மநீர் இருந்திருக்கக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. வெளிப்போக்குக் கால்வாய்கள் என அறியப்பட்ட பாரிய நீள்வடிவ நீரரிப்பு நிலங்கள், சுமார் 25 இடங்களில் செவ்வாய் மேற்பரப்புக்குக் குறுக்கே வெட்டிச் செல்கின்றன.

நிலத்தடி நீர்த் தேக்கங்களில் இருந்து வெளியேறிய, பேரழிவை ஏற்படுத்திய நீர் வழிந்தோடிய போது ஏற்பட்ட மண்ணரிப்புத் தடங்களே இவை என நம்பப்படுகின்றது. எனினும் சிலர் இவை பனியாறுகள் அல்லது எரிமலைக் குழம்புகளினால் ஏற்பட்டிருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். இவற்றுள் மிகப் பிந்திய கால்வாய்கள் சில மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றின. பிற பகுதிகளில் காணப்படும் இத்தகைய கால்வாய் வலையமைப்புக்களில் வடிவத்தில் இருந்து, செவ்வாயின் தொடக்க காலத்தில் பெய்த மழையினால் அல்லது பனிக்கட்டி மழையினால் ஏற்பட்ட வழிந்தோடிய அடையாளங்களாக இவை இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.

செவ்வாயின் மேற்பரப்பின் வெப்பநிலை +27 முதல் - 126 டிகிரி வரை உள்ளது. (பூமியில் +58 முதல் - 88.3 வரை) ஆனால் சூரியனிடமிருந்து பூமியை விட தூரத்திலிருப்பதால் சராசரி வெப்ப நிலை - 48 டிகிரி சென்டிகிரேட்.

இதனுடைய காற்று மண்டலம் மிகவும் மெல்லியது. பெரும்பாலும் கார்பன்டை ஆக்ஸைட் கொண்டது. டெலஸ்கோப்பில் பார்த்தால் மிகச் சிவப்பாகத் தெரியும். அதனால் தான் செவ்வாய் என்றும் ஆங்கிலத்தில் the red planet  என்றும் அழைக்கப்படு கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பூமியைப் போன்றே துருவங்கள் பனிப் பிரதேசங்களாக இருப்பது தான். இங்கு ஐஸ் என்பது பெரும்பாலும்ட்ரை ஐஸ்எனப்படும் கார்பன்டை ஆக்ஸைட் தான்.
Previous
Next Post »

More News