என்றும்
இளமையுடன் இருக்க தினமும் தேனை
அருந்த வேண்டும்
தேன் ஓர் இனிய உணவுப்
பொருள் ஆகும். மருத்துவ குணமும்
கொண்டது.
1. உடல்
ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும்.
தேனும், வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த
உடல் மெலியும், ஊளைச் சதை குறையும்,
உடல் உறுதி அடையும்.
2. தேனுடன்
எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி,
குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.
3. தேனுடன்
வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை
பிரகாசம் அடையும்.
4. தேனும்,
முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டு
வந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.
5. இருமல்,
சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான
நோய் எது இருந்தாலும் பார்லிக்
கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து
சாப்பிட இருமல் மட்டுப்படும் சளித்
தொல்லை குறையும்.
6. தேனையும்
மாதுளம் பழ ரசத்தையும் சம
அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டார் இருதய
நோய்கள் தீரும்.
7. உடம்பில்
இரத்தத் குறைவு அல்லது சோகை
நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு
வந்தால் சோகை நோய் நீங்கும்.
8. கருஞ்சீரகத்தை
நீர் விட்டுக் காய்ச்சி அதில் தேன் கலந்து
சாப்பிட, கீழ் வாதம் போகும்.
9. வயிற்றுவலி
ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி
நீங்கும்.
10. தேனோடு
பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த
நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.
11. அரை
அவுன்ஸ் தேனுடன் அரை அவுஸ்
இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில்
தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும்,
இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.
12. முருங்கைக்காய்ச்
சாறுடன் சம அளவு தேன்
கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.
13. தேன்
மிகச் சிறந்த உணவுப் பொருளாகும்.
தேன் மூலம் எல்லாப் பிணிகளையும்
நீக்க முடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை
நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும்
நமக்கு வராது. ஆனால், தேன்
சுத்தமான தேனாக இருக்க வேண்டும்.
14. நெல்லிக்
காய்களைத் துண்டு துண்டாக்கி தேன்,
ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து
இரண்டு நாட்கள் வெயிலில் காய
வைக்க வேண்டும். பின்பு ஒரு ஸ்பூன்
வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல்
குணமாகிவிடும் என்றும் இளமையுடன் இருக்க
வேண்டுமென விரும்புவோர் தினமும் தேனை அருந்த
வேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள்
கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர
வேண்டும்.
ConversionConversion EmoticonEmoticon