மனிதனின் இச்சைகளுக்கு
சட்டங்கள் துணை போனால் அதன் தாக்கம் எங்கே எங்களை அழைத்துச் செல்லும் . பிரிட்டனின்
ஒருபால் திரு மணத்தை அங்கீகரிப்
பதற்கான சட்ட மூலத்திற்கு அந்நாட்டு
கீழவையான பொதுச் சபையில் பெரும்
இழுபறிக்கு பின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
எனினும் பிரதமர் டேவிட் கெமரூனின்
கன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இந்த சட்ட மூலத்திற்கு
எதிராக வாக்களித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கீழவையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஒரு பால் திருமணத்திற்கு
ஆதரவாக 366 வாக்குகள் கிடைத்ததோடு எதிராக 161 வாக்குகள் பதிவாயின. இதில் எதிர்க்கட்சியான தொழிலாளர்
கட்சி ஆதரவாக வாக்களித்ததாலேயே இந்த
சட்டமூலம் வெற்றிபெற்றது.
இதன்படி
இந்த சட்ட மூலம் பரிசீலனைக்காக
மேலவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்தமாதம் பிரபுக்கள்
அவைக்கு சட்டமூலம் கொண்டுவரப்படும்போது அது கடும் எதிர்ப்புக்குள்ளாகும்
என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த வார
இறுதியில் பிரான்ஸ் ஒருபால் திருமணத்துக்கு உலகின்
14வது நாடாக சட்ட அங்கீகாரம்
அளித்தது.
எனினும்
இதற்கு எதிராக பிரான்ஸில் பாரிய
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. பிரிட்டனில் இதுபோன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறாவிட்டாலும் பாராளுமன்ற கீழவைக்கு முன் திங்கட்கிழமை சிறு
ஆர்ப்பாட்டம் ஒன்று பதிவானது.
ConversionConversion EmoticonEmoticon