யுத்த சூழ்நிலைகளிலும்
இங்கு தார்மீக குற்றங்களுக்காக
சிறையில் அடைக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆப்கானிஸ்தானில் பெருகி வருகின்றது. தலிபான்களின்
ஆட்சி கவிழ்ந்தபின் கடந்த 12 வருடங்களில் இந்த வருடம் அதிகப்படியான
எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 600 பெண்களும் சிறுமிகளும் சிறையில் உள்ளதாக மனித உரிமைக்
கண்காணிப்பு மையம் தெரிவிக்கின்றது.
கட்டாயத்
திருமணம், கற்பழிப்பு போன்றவற்றினால் வீட்டைவிட்டு ஓடிப்போவது போன்ற குற்றங்களினால் தற்போது
600க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். கடந்த 18 மாதங்களில் இது 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலை ஆப்கானிஸ்தான் அரசு
மற்றும் அதற்கு உதவி புரியும்
நாடுகளின் அரசியல் தோல்வியையே குறிக்கின்றது
என்று இக்கழகத்தின் ஆசியக் கிளையின் துணை
இயக்குனர் பெலிம் கினே தெரிவிக்கின்றார்.
பெண்கள்
தங்களுடைய கல்வி மற்றும் வேலை
குறித்த உரிமைகளை திரும்பப்பெற்ற போதிலும் நேட்டோ படைகள் அடுத்த
வருடம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்போது தங்களுடைய
இந்த உரிமைகள் மீண்டும் பறிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே
நிலவுகின்றது. ஜனாதிபதி ஹமீத் கர்சாய் பெண்களின்
பாதுகாப்பு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
என்ற குற்றச்சாட்டினை ஆப்கன் அரசு மறுத்துள்ளது.
பெண்களுக்கு
எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் அதாவது கட்டாயத் திருமணம்
சிறுவயதுத் திருமணம், கற்பழிப்பு, பெண்களை துன்புறுத்தல் போன்றவற்றிற்கு
எதிராக 2009ல் ஜனாதிபதி கொண்டுவந்த
தீர்மானத்தினை உறுதிப்படுத்த தற்போதைய அரசு தவறிவிட்டது. இந்த
சட்டத்தினை அவர்கள் சரிசெய்யாவிட்டால் எதிர்காலத்தில்
அதன் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்று
ஆராய்ச்சியாளர் ஹீதர் பார் எச்சரிக்கின்றார்.
ConversionConversion EmoticonEmoticon