பாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம்



அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கியுள்ள அருட்கொடைகளில் பேசும் ஆற்றலானது மிக மகத்தான அருட்கொடையாகும்.

 நாவு உள்ளத்தின் மொழிபெயர்ப்பாளனாகத் திகழ்கிறது. ஆகையால் அல்லாஹு தஆலா எமது உள்ளங்களை உறுதிப்படுத்திப் பேணுமாறு ஏவுகிறான்.


 உள்ளத்தை உறுதிப்படுத்துவதானது நாவை உறுதிப்படுத்துவதுடன் தொடர்புபட்டுள்ளது. ஒரு ஹதீஸ் பின்வருமாறு இதனைத் தெளிவுபடுத்துகின்றது. “ஒரு மனிதனுடைய உள்ளம் உறுதியாகாத வரை அவனுடைய ஈமான் உறுதியாகாது. அவனுடைய நாவு உறுதியாகாத வரை அவனுடைய உள்ளம் உறுதியாகாது.” (ஆதாரம்: அஹ்மத்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “ஒரு மனிதன் காலைப் பொழுதை அடைகின்ற போது அவனுடைய உறுப்புகள் எல்லாம் அவனுடைய நாவுக்குப் பின்வருமாறு கூறுகின்றது. எங்களுடைய விடயத்தில் நீ அல்லாஹ்வுக்குப் பயந்துகொள். நிச்சயமாக நாங்கள் உன்னைக் கொண்டே இருக்கிறோம். நீ உறுதியானால் நாங்கள் உறுதியாகின்றோம்; நீ கோணலானால் நாங்களும் கோணலாகிறோம்” (திர்மிதி)

மேலும் அவன் ஒரு விடயத்தைப் பேச முன்னர் அந்தப் பேச்சு பயனுள்ளதா எனத் தன்னைக் கேட்டுக் கொள்ள வேண்டும். அது சிறந்ததாக இருந்தால் அவன் பேசலாம் இல்லையேல் அவன் மெளனமாகி விடவேண்டும். இவ்வாறான நிலைகளில் மெளனமாக இருப்பது நற்கூலியைப் பெற்றுத் தரும் இபாதத்தாகக் காணப்படுகிறது. ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 “யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொள்கிறாரோ அவர் பேசினால் நல்லதையே பேசட்டும், இல்லையேல் மெளனமாக இருக்கட்டும்” (புஹாரி, முஸ்லிம்)

பொய் பேசுதல், தர்க்கித்தல், அவதூறு சொல்லல், சபித்தல், திட்டுதல், கோள் சொல்லுதல், புறம் பேசுதல் போன்ற சமுகத்துடன் தொடர்புபட்ட அதிகமான நோய்களை உருவாக்குவதில் நாவுக்கு மிகப் பெரும் பங்குண்டு. ஒரு மனிதன் தனது நாவை இவ்வாறான விடயங்களில் வீணாகப் பயன்படுத்துவது இறுதியில் கைசேதத்தையும் மறுமையில் வங்குரோத்து நிலையையுமே ஏற்படுத்தும். ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 ‘வங்குரோத்துக்காரன் என்றால் யார் என்று நீங்கள் அறிவீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து வினவினார்கள். அதற்கு ஸஹாபாக்கள்எங்களிடையே பண வசதி, செல்வம் எதையும் பெற்றிராதவர்தான் வங்குரோத்துக்காரன்எனப் பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள்என்னுடைய சமூகத்தில் வங்குரோத்துக்காரன் யாரென்றால் அவர் மறுமை நாளில் தொழுகையுடனும், நோன்புடனும் ஸகாத்துடனும் வருவார்.

 ஆனால் அவர் மனிதனை ஏசியிருப்பார்., அவதூறு சொல்லியிருப்பார், செல்வத்தைச் சாப்பிட்டிருப்பார், அடித்திருப்பார். எனவே அவருடைய நற்செயல்களிலிருந்து இவர்களுக்கு பங்கு வைக்கப்படும். (அவர் மீதுள்ள குற்றங் களுக்கு பகரமாக) அவரது நற்செயல்களிலிருந்து பங்கு வைக்கப்பட முன் அவருடைய நற்செயல்கள் முடிவடைந்துவிட்டால் அவரால் பாதிக்கப்பட்டவர்களின் தீமைகள் அவர் மீது சாட்டப்படும். அதனால் அவர் நரகில் வீசப்படுவார்எனக் கூறினார்கள்.

ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். “அல்லாஹ்வின் நபியே! நாங்கள் பேசுபவைகளுக்காக அல்லாஹ்விடத்தில் பிடிக்கப்படுவோமா?” எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள்முஆதே உமக்கென்ன நேர்ந்தது? மனிதர்கள் அவர்களுடைய நாவுகள் சம்பாதித்துக் கொண்டவைகளுக்காக அன்றி முகம் குப்புற நரகில் வீசப்படுவார்களா?” என வினவினார்கள்.

ஸலபுகள் நாவின் விபரீதங்கள் பற்றி மிக எச்சரிக்கையாக இருந்தார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள். “நாவை விட அதிக காலம்சிறை வைக்க வேண்டிய விடயம் உலகில் வேறெதுவுமில்லைமேலும் அபூதர்தா (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறுபவர்களாக இருந்தார்கள்.

உன்னுடைய நாவை விட உன்னுடைய இரு காதுகளுக்குள்ள உரிமையை ஏற்றுக்கொள். உனக்கு இரு காதுகளும் ஒரு நாவும் வழங்கப்பட்டுள்ளது ஏனெனில் நீ பேசுவதை விட அதிகமாக செவிமடுப்பதற்காகத்தான்எனவே, மனிதன் தனது பேச்சை கவனித்து அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ள வேண்டும்.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள். தெளிவான கூற்றைக் கூறுங்கள். அவன் உங்கள் செயல்களை சீர்படுத்தி உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பாடுகிறாரோ அவர் மகத்தான வெற்றியடைந்து விட்டார்” (அஹ்ஸாம்: 70- 71)

தமிழில் . றயீஸா ஹஸ்மத் ஜெபர்
உதவி விரிவுரையாளர், தென்கிழக்கு வளாகம்
Previous
Next Post »

More News