உங்களுக்குத்
தெரிந்தவ முஸ்லிம் அல்லாதவ அக்கம் பக்கத்து
வீட்டாரிடம் நபிகள் நாயகம் யார்?
என்று கேட்டுப்பாருங்கள் சிலர் “அவர் முஸ்லிம்களின்
கடவுள்” என்பார்கள்.
இன்னும்
சிலர் ‘அவர் ஆண்டவனின் பிள்ளை’
என்பார்கள்
மற்றும்
சிலர் “அவர் இறைவனின் அவதாரம்
என்பார்கள்.
மிகச் சிலர்தான் “அவர் இறைவனின் தூதர்”
என்று சரியாக விடை கூறுவார்கள்.
அவர்களிடத்திலும்
கூட, சரி தூதரின் பணிகள்
என்ன, தூதுத்துவம் (ஜிrophலீthooனீ)
என்பது என்ன?” என்று கேட்டுப்பாருங்கள்.
“திரு திரு” வென விழிப்பார்கள்
சகோதரச்
சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களிலும் பலருக்கு இது பற்றி ஒன்றும்
தெரியாது.
துரத்துவம்
என்பது என்ன?
மனிதர்களைப்
படைத்த இறைவன், படைத்ததோடு தன்
வேலை முடிந்தது என்று இருந்து விடவில்லை.
“மனித இனம் எக்கேடாவது கெட்டுப்
போகட்டும்” என்றும் அவன் வாளா
இருந்துவிட வில்லை.
மாறாக,
தான் படைத்த மனித இனத்துக்கு
நேர்வழி காட்டும் பொறுப்பையும் இறைவனே ஏற்றுக் கொண்டான்.
மனிதர்களுக்கு எப்படி நேர்வழி காட்டுவது?
இறைவனே
நேரில் வந்து வழி காட்டினால்
மனிதன் தாங்கமாட்டான். ஏனெனில் இறைவன் பேரொளிமிக்கவன்.
இறைவன் தன் சட்டங்களை, கட்டளைகளைத்
தானே செயல்படுத்திக் காட்டுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.
அப்பொழுது மனிதன் சுலபமாக ஒரு
கேள்வியை எழுப்ப முடியும்; “இறைவனே!
நீ மனித வடிவில் இருந்தாலும்
இறைவனுக்குரிய வல்லமைகள், ஆற்றல்கள் உனக்கு உண்டு. ஆகவே
உன் கட்டளைகளை நீ எளிதாக செயல்படுத்தி
விட முடியும். ஆனால் பலவீனர்களான நாங்கள்
அவற்றை எப்படிப் பின்பற்ற முடியும்?”
ஆகவே இதற்குச் சரியான தீர்வு மனிதர்களிலிருந்தே
ஒருவரைத் தேர்ந்தெடுத்து, அவருக்குத் தன் சட்டங்களையும், வழிகாட்டுதலையும்
அருளி, மற்ற மனிதர்களுக்கு அவரை
ஒரு முன்மாதிரியாக வாழச் செய்வது தான்
என்று இறைவன் தீர்மானித்தான்.
அப்படி
இறைவனால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாம் இறைத்தூதர்கள், அவர்களுக்கு
அளிக்கப்படும் பொறுப்புதான் தூதுத்துவம்!
தூதுத்துவம்
தொடர்பாகச் சில அடிப்படை உண்மைகளை
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
*தூதர்களாய்த்
தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்
மனிதர்கள்தானே தவிர, இறைவனோ, இறைவனின்
அவதாரமோ, இறைவனின் மகனோ அல்ல.
இறைவனிடமிருந்து
அவர்களுக்குத் திருச் செய்தி (வஹீ)
அறிவிக்கப்படுகிறது என்பதைத் தவிர, அவர்களுக்கும் மற்ற
மனிதர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
*எந்த ஒரு தூதரும் தன்னை
வணங்கும் படியோ, தான் இறைவனின்
ஓர் அம்சம் என்றோ பிரசாரம்
செய்யவில்லை. மாறாக, ‘இறைவனுக்கு அடிபணிந்து
வாழுங்கள்’ என்றுதான் அறிவுறுத்தினார்கள்.
*இந்தப்
பணிக்காக மக்களிடம் அவர்கள் எந்தக் கூலியையும்
எதிர்பார்க்க வில்லை. காணிக்கைகள், நேர்ச்சைகள்
தானதர்மங்களை அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
‘நேர்ச்சைகள் அனைத்தும் இறைவனுக்குரியவை’ என்று தெளிவுபடுத்தினார்.
இந்த உண்மைகளையெல்லாம் இறைத் தூதர்களின் வாய்
மூலமே மக்களிடம் சொல்ல வைத்து, அவற்றைத்
தன் வேதத்திலும் பதிவு செய்துவிட்டான் இறைவன்.
எடுத்துக்
காட்டாக, குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்.
(நபியே)
நீங்கள் சொல்லுங்கள் “நிச்சயமாக நான் உங்களைப் போன்ற
ஒரு மனிதனே! திண்ணமாக நான்
உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்
நான் என்று எனக்குத் திருச்
செய்தி (வஹீ) அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவர் தான்
இறைவனைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் நச் செயல்களைச்
செய்து, தன் இறைவனை வணங்குவதில்
வேறு எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும்! (அல்குர்ஆன் 18:110)
இறை தூதர்கள் அனைவர் மீதும் இறையருள்
பொழியட்டும்! அந்த நல்லோர்கள் வழியில்
நாமும் நடைபோடுவோம்!
நன்றி
“நம்பிக்கை” (மலேசியா) (2002 - மே)
ஏ.எம். முஹம்மத் ஸப்வான்
சீனன்கோட்டை,
பேருவளை
ConversionConversion EmoticonEmoticon