தவளை, தேரை, சிரோன், சலமந்திரா,
மரத்தவளை போன்ற உயிரினங்களை ஈரூடகவாழிகள்
என்கிறோம். அதாவது இவை நீரிலும்
நிலத்திலும் வசிப்பதால் ஈரூடவாழிகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.
முதலை,
ஆமை போன்றனவும் நிலத்திலும் நீரிலும் வசிக்கக் கூடியவை யாகும். ஆனால்
முதலை, ஆமை போன்றவற்றை ‘ஈரூடகவாழிகள்’
என்று உயிரியலாளர்கள் கூறுவதில்லை.
தவளை, தேரை, சிரோன், சலமந்திரா
போன்றவற்றை மட்டும் ‘ஈரூடகவாழிகள்’ என்று கூறுவது ஏன்?
ஆமை, முதலை போன்றவை நீருக்குள்
வசித்தாலும் சுவாசத்துக்காக தரைக்கு வரவேண்டியுள்ளது. ஆனால்
தவளை போன்றவை அவ்வாறில்லை.... தரையைப்
போன்றே தண்ணீருக்கு அடியிலும் எத்தனை நேரமும் வெளியே
வராமல் தோல்மூலம் சுவாசித்துக் கொண்டு வசிக்கக் கூடியன.
இத்தகைய ஈரூடக சிறப்பு இயல்பு
முதலை போன்றவற்றிடம் கிடையாது.
ConversionConversion EmoticonEmoticon