அசோக்குமார்
கிரேக்கம்
மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட
பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அந்த நாடுகள்
தமது கையிருப்பிலிருந்த தங்கத்தை சந்தையில் விற்பனை செய்ததாலேயே உலக
சந்தையில் தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்திருப்பதாக
இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் ஹோலி அவுன்ஸ் தங்கமொன்றின்
விலை 1500 அமெரிக்க டொலரிலிருந்து 1380 அமெரிக்க டொலராக குறைந்தது. இதன் எதிரொலியாக தங்கத்தின்
விலை வீழ்ச்சியடைந்தது.
மேற்படி
இரு நாடுகளினதும் கையிருப்பிலிருந்த தங்கம் ஒரே நேரத்தில்
சந்தையில் விற்பனைக்கு வந்ததால் ஏற்பட்ட நிரம்பல் காரணமாகவே
இத்திடீர் விலைவீழ்ச்சி ஏற்பட்டது என்றும், இது ஒரு தற்காலிகமான
நிலைமையே என்றும் இலங்கை மத்திய
வங்கியின் பிரதி ஆளுநர் ஆனந்த
சில்வா தினகரனுக்குத் தெரிவித்தார்.
தங்க விலை வீழ்ச்சியினால் இலங்கைக்குப்
பாரிய இலாபம் ஏற்படப்போவதில்லை என்று
தெரிவித்த அவர், நுகர்வோர் இதனை
சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதிகளவில் தங்கத்தை கொள்முதல் செய்து முதலீடு செய்யக்கூடியவர்கள்
இலங்கையில் மிகக் குறைவு. எனினும்,
இந்தியா, சீனா போன்ற நாடுகளில்
பெருமளவு தங்கத்தை கொள்வனவு செய்து முதலீடு செய்வதற்கு
பெருமளவானவர்கள் முன்வருகின்றனர் என்றும் கூறினார்.
இதேநேரம்,
சுமார் 30 வருடங்களின் பின்னர் தங்கத்தின் விலை
ஒரேநாளில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது
என கொழும்பு செட்டியார்தெரு நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர். இந்த
விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து தங்கத்தைக் கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக டுபாய் சந்தையில் தங்கத்துக்கான
தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தியா,
சீனா போன்ற நாடுகள் டுபாய்
சந்தையிலிருந்து தங்கத்தை பெருமளவில் கொள்வனவு செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது
என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நேற்றைய நிலவரப்படி
கொழும்பு செட்டியார்தெரு நகைக்கடைகளில் 22 கரட் தங்கத்தின் விலை
43,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை
46,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் விலை
38,000 ரூபாவாகவும் பதிவாகி யிருந்தது.
ConversionConversion EmoticonEmoticon