* விசாரணைகளில்
1000க்கும் அதிகமான அதிகாரிகள்
* பிரஷர்
குக்கரில் இருந்த குண்டே வெடித்தது
அமெரிக்காவின்
பொஸ்டன் நகரில் இரட்டைக் குண்டுத்
தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்கள் கடந்துள்ளபோதும்
சூத்திரதாரிகள் யார்? எதற்காகச் செய்தார்கள்
போன்ற கேள்விகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.
கடந்த காலத்தில் அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் இடம்பெற்ற குண்டுத்
தாக்குதல் சூத்திரதாரி ஒரு நாளில் கண்டுபிடிக்கப்பட்டார்.
செப்டெம்பர் 11 குண்டுத் தாக்குதலுடன் யார் தொடர்பு என்பது
இரண்டு நாட்களுக்குள் அமெரிக்க அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது.
எனினும்,
பொஸ்டன் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் யார்? எதற்காக இதனைச்
செய்தார்கள் என்ற இரண்டு கேள்விகளுக்கும்
இதுவரை அமெரிக்க அதிகாரிகள் விடை கண்டுபிடிக்கவில்லை.
பொஸ்டன்
நகரில் மரதன் ஓட்டப் போட்டி
நடைபெற்ற இடத்தில் போட்டி முடிவடையும் இடத்துக்கு
அண்மையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு
குண்டுகள் வெடித்ததில் 8 வயதுச் சிறுவன் ஒருவன்
உட்பட 3 பேர் உயிரிழந்ததுடன், 183 பேர்
காயமடை ந்திருந்தனர். 15 செக்கன் இடைவெளியில் அடுத்தடுத்து
வெடித்த இரண்டு குண்டுகள் குறித்து
விசாரணைகளை எவ்.பி.ஐ.
முடுக்கிவிட்டுள்ளது.
கேக் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிரஷர் குக்கரில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்துள்ளதாக எவ்.பி.ஐ. அதிகாரிகள்
கண்டு பிடித்துள்ளனர். கறுப்பு
நிறத்திலான நைலோன் துணியினால் இந்தக்
குக்கர் சுற்றி எடுத்துவரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள்
சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தக் குண்டை யார்
கொண்டுவந்து வைத்தார்கள் என்பது குறித்து அவர்கள்
தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
1000ற்கும்
அதிகமான சட்ட அதிகாரிகளும் 30 மத்திய
பாதுகாப்பு முகவர்களும் சூத்திரதாரிகளைத் தேடி வருகின்றனர். குண்டுத்
தாக்குதலின் சூத்திரதாரிகள் குறித்த தகவல்களை வழங்குமாறு
எவ்.பி.ஐ. அதிகாரிகள்
மக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.
பொஸ்டன்
மரதன் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட
தனது தந்தையை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த
8 வயதுச் சிறுவனான மார்ட்டின் ரிச்சட்ஸ் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவரில் மூன்றாவது நபர் சீனாவைச் சேர்ந்த
மாணவியாவார். உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக
அமெரிக்கா உட்பட பல நாடுகளில்
மெளன அஞ்சலியும், பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
இக்குண்டுத்
தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்களின் பாதுகாப்புக்
குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எவ்.பி.ஐ
பணித்துள்ளது. அமெரிக்காவைத்
தொடர்ந்து ஏனைய நாடுகளும் தமது
பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளன. அதேநேரம், அமெரிக்காவின் பொஸ்டனில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பில் பல்வேறு உலக நாடுகள்
தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான
பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு உலக நாடுகள் ஒன்றிணைய
வேண்டும் என உலகத் தலைவர்கள்
கேட்டுக் கொண்டுள்ளனர். பொஸ்டனில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்தி ருப்பதுடன்,
மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து
கவலையடை வதாகவும் லண்டன் மேயர் பொரிஸ்
ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம்,
பொஸ்டன் தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பு இல்லையென பாகிஸ்தான்
தலிபான் அமைப்பு அறிவித்திருப்பதாக சர்வதேச
செய்திச் சேவையொன்று குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவுடன் இணைந்து மதத்துக்கு எதிராகச்
செயற்படும் பாகிஸ்தானின் செயற்பாடுகளையே தாம் எதிர்த்து வருவதாக
அந்த அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் அந்த செய்திச்
சேவையிடம் கூறியுள்ளார்.
இவ்வாறான
பயங்கரவாதத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு அனைத்து நாடுகளும் ஒன்றிணைய
வேண்டுமென ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர்
புட்டீன் தெரிவித்துள்ளார். குண்டுத் தாக்குதலின் பின்னரான விசாரணைகளுக்குத் தேவையான சகல உதவிகளையும்
வழங்கத் தாம் தயார் என்றும்
அவர் குறிப்பிட்டுள்ளார். பொஸ்டன் குண்டுத் தாக்குதல்
சம்பவத்தை பிரான்ஸ், இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளி
ட்ட பல்வேறு நாடுகள் கண்டித்து
ள்ளன.
ConversionConversion EmoticonEmoticon