கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸிசும் அவரது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பளிப்பும்




இஸ்லாமிய சிந்தனையையும் முஸ்லிம் உலகையும் நவீன சிந்தனைக்கும் புதிய யுகத்திற்கும் புதிய கல்விக்கும் தயார்படுத்துவது எவ்வாறு என்ற கேள்விகளோடு ஒரு முஸ்லிம் சிந்தனையாளர் குழு 19 ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது. இந்தியாவில் சேர்.செய்யத் அகமத் கான் (1817-1989), ஈரானில் ஜமாலுத்தீன் அல் - ஆப்கானி (1839-1897), எகிப்தில் ஷெய்க் முஹம்மத் அப்தூ (1949-1905), iத்றிதா (1965-1935) போன்றோர் இச்சிந்தனைப் பிரவாகத்தின் பெரும் பகுதியை தமது ஆக்கிரமிப்பிற்குள் வைத்திருந்தனர்.






பத்தொன்பதாம் சூற்றாண்டில் தமதுமுஸ்லிம் நேசன்பத்திரிகை மூலம் மறுமலர்ச்சித் தந்தை சித்திலெப்பை இச்சிந்தனைகளை இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். நவீன கல்விக்காக சித்திலெப்பை முன்னெடுத்த போராட்டங்களினதும் முஸ்லிம்களின் சிந்தனை மாற்றத்திற்காக அவர் எடுத்த முதல் முயற்சிகளினதும் ஊற்றுக் கண்களாக முஸ்லிம் நவீனத்துவ சிந்தனைகளே அமைந்திருந்தன.

இச்சிந்தனைகளை பிரதிபலித்த அடுத்த கட்டத்தின் ஆளுமையாக .எம்..அஸீஸ் விளங்குகிறார். 19ஆம் நூற்றாண்டில் எழுச்சிபெற்ற முஸ்லிம் நவீனத்துவ சிந்தனைத் தாக்கத்தோடும் 1920, 30களின் இஸ்லாமிய சமய புனருத்தாரண சிந்தனையோடும் பிரவேசித்த அல்லாமா முஹம்மது இக்பாலின் தத்துவங்களோடும் தனது சிந்தனையை வளர்த்துக் கொண்டதிலிருந்து .எம்.. kஸின் இஸ்லாமிய மற்றும் உலகப் பார்வை விரிவு பெற்றது. kஸ் இஸ்லாத்தின் சமாதான தூதை மட்டுமன்றி சமூக சமத்துவத்தை வலியுறுத்தும் புரட்சிகர சிந்தனைகளையும் சமூகத்திற்கு எடுத்துக் காட்டினார்.

kஸின் குடும்பத்தினர் (1937இல் மாத்தளையில் எடுக்கப்பட்ட படம்) (நிற்பவர்கள்) சித்தி, சாகுல் அனீத், ஜெkமா (இருப்பவர்கள்) உம்மாச்சி, kஸ், ராசாத்தி அப்பா, உம்மம்மா, உம்மு, இப்ராஹிம் சாஹிப் (நிலத்தில் அமர்ந்திருப்போர்) வீட்டு உதவியாளர்கள்

நவீன கல்வி, நவீன விஞ்ஞானம், நவீன சிந்தனைகளுடன் இஸ்லாத்தின் சிந்தனைகளை விளக்குவதற்கும் தவறான கொள்கைகளுக்கு எதிரான சமயப் புனர்நிர்மாணச் சிந்தனைகளைப் பரிசீலிப்பதற்கும் kஸ் தாயராக இருந்தார். ‘சமூக முன்னேற்றம்அவரது பிரதான இலட்சியமாகும். அறிவு, கல்வி, இஸ்லாம் என்ற பின்னணியிலிருந்துமுன்னேற்றம்’, ‘எதிர்கால வாழ்வுஎன்பவற்றிற்கு எதிரான பழைமை வாதத்தை kஸ் எதிர்த்தார். கல்வியின் ஊடாக கலை, இலக்கியம் உட்பட்ட விரிவான கலாசார மறு மலர்ச்சிக்கு kஸ் வித்திட்டார். kஸை அறிந்து கொள்வது 20ஆம் நூற்றாண்டு இலங்கை முஸ்லிம்களின் கல்வி, சிந்தனை, கலாசார மறுமலர்ச்சி, சமூக மாற்றம் பற்றிய ஆராய்ச்சியின் முக்கிய பகுதியாக அமைந்துள்ளது.

குடும்பப் பாரம்பரியம்

கொழும்பிலும் தென்னிலங்கையிலும் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்டபோதும் kஸ் தனது குடுமபப் பாரம்பரியத்தின் மூலம் யாழ்ப்பாண மண்ணிற்குச் சொந்தமானவர். யாழ்ப்பாணத்தில் கீர்த்தி மிக்க குடும்பத்தைச் சேர்ந்த அபூபக்கர் இன் மூத்த புதல்வராக 1911ஆம் ஆண்டு, ஒக்டோபர் 04ஆம் திகதி பிறந்தார். புகழ்பெற்ற புலவர் திலகம் சு.மு.அசனா லெப்பையின் சகோதரரான அபூபக்கர், சட்டத்தரணியும் காதியாரும் ஆவார். kஸின் தந்தை பல வருடங்கள் யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராகச் சேவையாற்றியதோடு 1941 இல் யாழ்ப்பாண நகரசபையின் உப தலைவர் பதவியையும் அலங்கரித்தவர். பின்னர் 1946 இல் அகில இலங்கை முஸ்லிம் லீ தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டவர்.

தாயார் பெயர் சுல்தான் முஹம்மது நாச்சியா. குடும்பத்தில் kஸ் மூத்தவர், இரண்டாமவர் தாஹா இளம் வயதில் இறந்துவிட்டார். kஸின் ஏழாவது வயதில் தாயாரும் காலமாகி விடவே, kஸ் தாயாரின் பெற்றோரின் பராமரிப்பில் வளர்ந்தார்.

ஸாஹிறா கல்லூரியின் முகப்புத்தோற்றம்

தந்தை அபூபக்கர் இரண்டாம் தாரமாக ஆயிஷா உம்மாவை மணம் முடித்தார். ஷரீபா, றஹீமா உட்பட பல குழந்தைகளை இவர்கள் பெற்றெடுத்தனர். ஷரீபா முன்னாள் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வராகப் பணியாற்றிய சுல்தானின் மனைவியாவார்.

தாயின் தந்தையான முஹம்மது சுல்தான் அப்துல் காதர் (இராசாத்தி அப்பா), தாயின் தாயானஉம்மம்மா’ (சுல்தான் அப்துல் காதர் நாச்சியா) kஸின் தாயாரின் சகோதரியானஉச்சிம்மாஆகியோரின் பராமரிப்பில் kஸ் வளர்ந்தார். தன்னை வளர்த்து ஆளாக்கிய குடும்பத்தினருடன் குறிப்பாக உம்மாச்சி, இராசாத்தி அப்பா ஆகியோருடன் மிகுந்த பற்றுதலையும் பாசத்தையும் kஸ் வெளிப்படுத்தி வந்தார். சிறுபராயத்தில் kஸ் மீது பாசமும் பரிவும் காட்டியவர்களில் சு.மு.அசனா லெப்பை புலவர் முக்கியமானவர்.

புலவர் அசனா லெப்பை மீது kஸ் பெருமதிப்பு வைத்திருந்தார். kஸின் ஆய்வு ஆர்வத்தைத் தூண்டியதில் சு.மு. அசனா லெப்பைக்கு முக்கிய பங்குண்டு.

kஸ் தனது ஆரம்பக் கல்வியை குர்ஆனும் தமிழும் சேர்த்துக் கற்பிக்கப்பட்ட பாடசாலையில் பயின்றார். அன்று அது அல்லாப் பிச்சைப் பள்ளி என்று அழைக்கப்பட்டது. பின்னர் இது முஹம்மதிய முஸ்லிம் கலவன் பாடசாலையாகவும் அதைத் தொடர்ந்து கதீஜா மஹா வித்தியாலயமாகவும் மாற்றப்பட்டது.

வைதீஸ்வராக் கல்லூரி

1920, செப்டம்பரில் kஸ் தனது குர்ஆன் பள்ளிக்கூடக் கல்வியை நிறைவு செய்து கொண்டார். திட்டமிட்டபடி 1921 இல் வண்ணார்ப்பண்ணை இராமகிருஷ்ண மிஷன் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் தமது கல்வியை kஸ் ஆரம்பித்தார். சாரம், தொப்பி முதலிய இஸ்லாமியரின் கலாசார உடையுடன் kஸ் அப்பள்ளிக் கூடத்திற்குச் சென்றார்.

ஸாஹிறா கல்லூரியின் அதிபராக kஸ்

சுமார் இரண்டு வருடங்கள் மட்டுமே வைத்தீஸ்வராவில் கல்வி கற்றபோதும் கல்வி, ஒழுக்கம், நற்பண்புகளின் வளர்ச்சி என்பனவற்றில் தம்மை சிறப்பாக வழிநடத்திய கல்வி நிலையம் என வைத்தீஸ்வரா வித்தியாலயம் பற்றி kஸ் தமது குறிப்புகளில் பதிவு செய்துள்ளார்.

யாழ். இந்துக்கல்லூரி

பின்னர் kஸ் இன் இடைநிலைக் கல்வி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆரம்பமானது. இலத்தீன் மொழி, விஞ்ஞானம் ஆகியவற்றைப் பயில்வதற்கும் கேம்பிரிட்ஜ் சிரேஷ்ட பரீட்சையில் தோற்றுவதற்காகவுமே அவர் இந்துக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தார். 1923இல் 6ஆம் வகுப்பில் அவர் இந்துக் கல்லூரியில் தனது கல்விப் பயிற்சியை ஆரம்பித்தார். இந்து மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றுவந்த அக்கல்லூரியில் kஸ் முதல் முஸ்லிம் மாணவராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். 1929இல் அவர் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும்வரை அவரது கல்வி வாழ்வு இந்துக் கல்லூரியில் நீடித்தது.

kஸ் தனது பதினோராவது வயதில் இரட்டிப்பு வகுப்பேற்றம் பெற்றிருந்தார். அவர் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டிருந்தும் அவரது குறைந்த வயது காரணமாக பல்கலைக்கழகம் செல்ல முடியாதிருந்தார். வீட்டுச் சூழலும் வைதீஸ்வரா மற்றும் இந்துக் கல்லூரிப் பிரவேசங்களும் kஸ் தமிழிலும் நல்ல பயிற்சியைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பை அளித்தன. பிற்காலத்தில் அவர் தமிழ் மொழியிலும் சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்க அவரது இக்கல்லூரிகளின் தொடர்புகளும் பக்கபலமாக இருந்துள்ளன.

உயர்கல்வி

1929இல் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து அங்கு அவர் வரலாற்றுத் துறையைச் சிறப்புப் பாடமாகத் தெரிவு செய்து லண்டன் பல்கலைக்கழகத் தேர்வுக்குத் தயாரானார். 1929 -33 களில் பல்கலைக்கழகக் கல்வியை நிறைவு செய்து வரலாற்றில் (B.A.Hons) சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். அத்துறையில் அவருக்கிருந்த ஆர்வம் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் கலைத் துறைக்கான புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பயனாக 1933இல் kஸ் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புனித கதரின் கல்லூரியில் வரலாற்றுத்துறையில் மேல் படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணமானார்.

kஸின் குடும்பம்: மனைவி உம்மு குல்தூம், மகள் மரீனா, மகன்மார் இக்பால், அலி

வரலாற்றுத் துறையில் கலாநிதிப்பட்ட ஆய்வுக்கான அவரது ஆவல் வெற்றி பெற வாய்ப்புக் கிடைத்தபோதும் அவரது மற்றொரு பரீட்சைப் பெறுபேறு அவரது கல்வி முயற்சிக்குத் தடையாக அமைந்தது. அப்போது மிகவும் கெளரவமான பதவியாகக் கருதப்பட்ட இலங்கை சிவில் சே¨யாளருக்கான தேர்வில் அவர் சித்தி பெற்றார். அதனால், அவர் உயர் கல்வியைத் தொடராது நாடு திரும்ப வேண்டிய நிலை உருவாகியது. உண்மையில் வரலாற்றுத் துறையும் ஆய்வுத்துறையும் சிறந்த ஒரு கல்விமானை இழந்தது. எனினும் இலங்கையின் சிவில் சேவையில் (CCS) சேர்ந்து கொண்ட முதல் முஸ்லிம் என்ற கெளரவம் அவருக்காகக் காத்திருந்தது.

திருமணம்

kஸ் திருமண பந்தத்தின்மூலம் கொழும்பில் தனது வாழ்வை ஆரம்பித்தார். கொழும்பில் பாரkகக் கொன்சலராகக் கடமையாற்றிய எம்..முஹம்மத் அலியின் பேத்தியும், இலங்கை சட்ட நிரூபண சபையின் முதலாவது முஸ்லிம் அங்கத்தவரான எம்.சி.அப்துல் றகுமானின் பூட்டியுமான உம்மு குல்தூம் என்பவரை 1937இல் kஸ் திருமணம் செய்தார்.

kஸ் தம்பதியினர் மரீனா சுல்பிக்கா, முஹம்மத் அலி, இக்பால் ஆகியோரைப் பெற்றெடுத்தனர். 1972இல் மனைவி உம்மு குல்தூம் மறையும் வரை உம்மு குல்தூம் - kஸ் திருமண பந்தம் நட்புறவுடன் கூடிய குடும்ப பாசமாக இறுதிவரை பிரகாசித்தது. kஸின் வெற்றிகளின் பின்னணியில் உம்முகுல்தூமின் நிறைவான ஒத்துழைப்பும் அன்பும் ஒன்று கலந்திருந்து.

அரச பணி

1942 இல் உதவி அரசாங்க அதிபராக கல்முனைக்குச் சென்றார். குறுகிய காலமே அங்கு வாழ்ந்தாலும் அவரது அரசாங்கக் கடமைகளோடு, பொதுநல ஈடுபாடு, மக்கள் சேவை, வரலாற்று ஆய்வுகளுக்கான தகவல்களைச் சேகரித்தல் போன்ற பல பணி களை அவர் முன்னெடுத்தார்.

சுவாமி விபுலானந்தருடன் நெருக்கமான உறவுகளை கல்முனையில் பணியாற்றும் காலத்தில் kஸ் ஏற்படுத்திக் கொண்டார். அதேபோன்று 1930களில் புதிய சிந்தனைகளையும், இஸ்லாமிய மற்றும் கல்வி எழுச்சிகளையும் பற்றிப் பாடிவந்த மூத்த மூஸ்லிம் கவிஞரான காத்தான் குடி அப்துல் காதர் லெப்பையின் தொடர்பும் கல்முனைக் காலத்திலேயே ஆரம்பமாகியது.

1943இல் kஸ் மாற்றலாகி கண்டியில் தனது பணிகளை ஆரம்பித்தார். கண்டியில் தனது அரசபணிகளுக்கு மத்தியில் பொதுப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்ட தோடு படித்த மற்றும் வர்த்தகப் பிரமுகர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக்கொண்டார். அதன் விளைவாகக் கண்டியில் இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தை (YMMA) தாபிப்பதிலும் அவர் வெற்றி பெற்றார்.

ஸாஹிரா அவரது கல்விச் சிந்தனைகளுக்கும் சேவைகளுக்கும் சிறந்த களமாக அமைந்தது. 1950லிருந்து அடுத்த 22 வருடகால வாழ்வு கல்வி, அரசியல், மொழிக் கொள்கை, கல்விச் சகாயநிதியம், இலங்கை முஸ்லிம் கலாசாரமையம், நவீன சிந்தனை, முஸ்லிம் பண்பாட்டு வளர்ச்சி என்ற செயல்பாடுகளாகவும் இலட்சியங்களாகவும் விரிவு பெற்றுச் சென்றன. சடுதியாக ஏற்பட்ட நோயினால் 1973 நவம்பர் 24ஆம் திகதி காலமாகும்வரை கல்விக்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் பொதுநல சேவைகளுக்காகவும் kஸ் தனது வாழ்வை அர்ப்பணித்திருந்தார்.

k¤ம் ஸாஹிறாவும்

சேர். செய்யித் அகமத்கான் 1875இல் இந்தியாவில் அலிகாரில் ஆரம்பித்த முதல் நவீன கல்விக் கூடமான அலிகார் முஸ்லிம் கல்லூரி இஸ்லாமிய மரபுகளை விட்டுக்கொடுக்காது புதிய கல்வியை முஸ்லிம்கள் எவ்வாறு தமது பண்பாட்டில் இணைக்கலாம் என்பதற்கு ஒரு பரிசோதனை அல்லது முன்னோடி ஸ்தாபனமாக அமைந்தது. கொழும்பில் ஸாஹிராக் கல்லூரியின் தோற்றத்தின் ஆதாரச் சிந்தனைகளுக்கு அலிகார் கல்லூரி ஒரு வழிகாட்டியாகவும் இருந்தது.

அலிகாரின் தோற்றத்தையும் அது போன்ற விடயங்களையும் அறிந்ததைத் தொடர்ந்தே நவீன பாடசாலைகள் நிறுவப்பட வேண்டு மென 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் கொழும்பில் முஸ்லிம்களிடையே பெரும் முயற்சிகள் ஆரம்பமாகின. 1882ஆம் ஆண்டு ஸாஹிராக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் முஸ்லிம்களுக்கான ஆங்கிலப் பாடசாலையாகவும் உயர் கலாசாலை என்ற பெயருக்குரியதாகவும் ஸாஹிறா மட்டுமே இருந்தது. கல்வியோடு முஸ்லிம்களின் எதிர்காலமும் ஸாஹிறாவின் வளர்ச்சியில் ஒன்றிணைந்திருந்த சகாப்தமென அதை வர்ணிக்கலாம்.

ஸாஹிறாவின் பெருமைமிக்க யுகத்தின் ஒப்பற்ற தலைவராக kஸ் விளங்கினார். முஸ்லிம்களின் மிக உயர்ந்த கலாபீடமாக விளங்கிய கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராக kஸ் பணியாற்றிய காலம், ஸாஹிறாவின் வரலாற்றில் பிரகாசமிக்க பொற்காலமாக அமைந்தது. ஸாஹிறாவின் முன்னேற்றத் திற்காகப் பாடுபட்ட ரி.பி.ஜாயா வின் (1890-1960) பிரியாவிடையோடு .எம்..kஸின் ஆட்சிக்காலம் ஸாஹிறாவில் ஆரம்பமாகியது. 1948 ஆகஸ்ட் மாதம் ஸாஹிறாவின் அதிபர் பொறுப்பை kஸ் ஏற்றுக்கொண்டார்.
Previous
Next Post »

1 Comments:

Click here for Comments
Unknown
admin
September 10, 2013 at 3:57 PM ×

NALLATHAKAVALKAL ARIJARKAL PATTIYA THAKAVALKAL THANKYOU

Congrats bro Unknown you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar

More News