உலகில்
நன்னீர் மீன்வளம் உயர்ந்து வருகிறது. மேலும் உற்பத்தியை அதிகரிக்க
வெவ்வேறான மீன் வளங்களை திறமையாகக்
கையாள வேண்டும். இதில் முக்கியமான ஒன்று
குளத்தைப் பராமரித்து தேவையான அளவு உரமிடுதலாகும்.
மீன் குளத்தில் உணவு சுழற்சியில் முதல்
தேவையானவை தாவர நுண்ணுயிர் மிதவைகள்
ஆகும். இந்த நுண்ணுயிர்கள் நீரைப்
பச்சை நிறமாக மாற்றுகின்றன. இதனால்
நுண்ணுயிர்ப் பெருக்கம் அதிகரிக்கிறது. எனவே மீன்களுக்கு இதுவே
இயற்கை உரமாக அமைகிறது. மாவுப்பொருள்
தொகுப்புகளில் கரியமில வாயு, தண்ணீர்
மற்றும் சூரிய ஒளி இருந்தாலும்
மிதவை தாவர நுண்ணுயிர்களுக்கு கனிமச்சத்துக்கள்
தேவைப்படுகின்றன.
தழைச் சத்து மனிச்சத்து, சாம்பல்சத்து,
சுண்ணாம்பு, கந்தகம், இரும்பு தாமிரம், துத்தநாகம்,
மற்றும் மாங்கனீசு சத்துக்களே இவையாகும். மிதவை தாவர நுண்ணுயிர்கள்
வளர்வதற்கும் மற்றும் குளத்தின் உற்பத்தி
திறனுக்கும் தேவையான சத்துக்கள் நீரில்
இருக்க வேண்டும். மண் மற்றும் நீரின்
மேலாண்மையை பொறுத்தே குளத்தில் உள்ள மீன்களுக்கு இயற்கை
உணவு கிடைக்கும். இதனால் மீன்கள் நல்ல
வளர்ச்சியடையும். குளத்தில் உள்ள நீருக்கு தேவையான
சத்துக்கள் குளத்து மண்ணிலிருந்து கிடைக்கின்றன.
குளத்தில்
மீன் உற்பத்திக்கு கார, அமிலத்தன்மை முக்கியமான
ஒன்று. இது குளத்தில் உள்ள
இரசாயன தாக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. நடுநிலையிலிருந்து சிறிது காரத் தன்மையுள்ள
மண் கார அமிலத்தன்மை (7 மற்றும்
அதற்கு மேல்) உள்ளவை மீன்
உற்பத்திக்கு ஏற்றதாகும். இந்த அளவைவிட குறைந்தால்
அமிலத்தன்மையாக மாறி நீரில் உள்ள
சத்துக்களை குறைத்துவிடும்.
பக்டீரியாவின்
ஆற்றலை அதிகரிக்க மற்றும் உயிர் வேதியல்
முறை மூலம் நுண்ணுயிர்களில் இருந்து
சத்துக்கள் வெளியாகின்றன. இயற்கை கரிமம் குளத்து
மண்ணில் 0.5% க்கு குறைவாக இருக்கக்
கூடாது 0.5 – 1.5% மற்றும் 1.5 – 2.5% நடுநிலை மற்றும் அதிக
அளவு இருக்கலாம். இதே போன்று 2.5% க்கு
மேல் இருந்தால் மீன் உற்பத்தி செய்ய
முடியாது.
கரிமம்,
நைட்ரஜன் விகிதம்
மண் நுண்ணுயிர்களின் வளர்ச்சிக்கு கரிமம் நைட்ரஜன் விகிதம்
தேவைப்படுகிறது. கரிமம், நைட்ரஜன் விகிதம்
உடையும் அளவு அதிவேகமாக, நடுநிலை,
குறைவாக இருக்க வேண்டும். பொதுவாக
கரிமம்: நைட்ரஜன் விகிதம் 10 முதல் 15 க்குள் இருந்தால் மீன்
வளர்ப்புக்கு ஏற்றதாகும். 20:1 இருந்தால் மீன் அதிகளவு உற்பத்தியாகும்.
மீன் குளங்களில் பொஸ்பேற் உரத்திற்கு சுப்பர் பொஸ்பேட்டை பயன்படுத்தலாம்.
இன்னும்
நல்ல உற்பத்தி கிடைக்க வேண்டுமென்றால் வார
இடைவெளி விட்டு பொஸ்பேட் உரம்
அளிக்க வேண்டும். மியுரேட் ஆஃப் பொட்டாஸ் மற்றும்
பொட்டாசியம் சல்பேட் ஆகிய இரண்டும்
பொட்டாஸ் உரங்களாக மீன் குளத்தில் பயன்படுத்துகிறார்கள்.
குளத்தில்
நீர் நல்ல கரும்பச்சை நிறத்தில்
இருக்கும்போதே குளங்களில் அதிக பாசிகள் தோன்றி
நீரின் மீது அடை அடையாக
மிதக்கும். இதன் முலம் உயிர்வளிக்
குறைவை தடுக்கலாம். குறைந்த உரங்களே தேவைப்படும்.
இயற்கை
மற்றும் இரசாயன உரங்களை கலந்து
இடும்போது கவனம் தேவை. சுத்தமில்லாத
குளத்தில் இயற்கை உரமிட்டால் சுத்தமாகும்.
அதிக இயற்கை உரமிடுவதால் பாசிகள்
நிறைய வளரும்.
ConversionConversion EmoticonEmoticon