வழிகள்
இரண்டு! முடிவு ஒன்று!
இரண்டு
நரிகள் ஒரு கோழிப் பண்ணைக்குள்
நுழைந்தன. அங்கே ஏராளமான கோழிகள்
இருந்தன. இரண்டும் கோழிகளைக் கொன்று தின்னத் தொடங்கின.
“ஆ! எவ்வளவு நல்ல வாய்ப்பு!
நாம் எவ்வளவு கோழிகளைத் தின்ன
முடியுமோ வயிறு முட்ட அவ்வளவையும்
தின்றுவிட வேண்டும்” என்றது ஒரு நரி.
“நாளைக்கும்
இங்கு வந்து தின்னலாம். சில
கோழிகளை விட்டு விட்டுச் செல்வோம்”
என்றது இன்னொரு நரி.
“ஒரு வாரத்திற்குப் போதுமானதைத் தின்னாமல் இங்கிருந்து போக மாட்டேன். மீண்டும்
இங்கு வரும் போது நாம்
காவல்காரர்களிடம் சிக்கிக்கொண்டால் என்ன செய்வது” என்ற
அது, விருப்பம் போல வயிறு முட்ட
உண்டது.
இன்னொரு
நரியோ போதுமான அளவு உண்டுவிட்டு
அங்கிருந்து புறப்பட்டது.
வயிறு முட்ட உண்ட நரியோ
தள்ளாடித் தள்ளாடி நடந்து வந்தது.
அப்படியே கீழே விழுந்து செத்தது.
இன்னொரு
நரியோ மறு நாள் மீண்டும்
அந்தக் கோழிப் பண்ணைக்குள் நுழைந்தது.
எப்படியும் நரி வரும் என்று
காத்திருந்த காவல்காரன் அதை அடித்துக் கொன்றான்.
ஒன்று அதிகம் உண்டதால் இறந்தது.
இன்னொன்று பேராசையில் மாண்டது.
ConversionConversion EmoticonEmoticon