இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி


சிறிலங்காவானது தனது ஆடை ஏற்றுமதிக்கான சந்தையை சீனாவில் விரிவுபடுத்திய போதிலும் கூட தொடர்ந்தும் சிறிலங்கா ஆடை ஏற்றுமதியானது வீழ்ச்சியடைந்துள்ளதாக வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சிறிலங்காவின் இவ்வாண்டு ஆடை ஏற்றுமதியானது கடந்த ஆண்டை விட வீழ்ச்சியடைந்துள்ளதுஎன சிறிலங்கா ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் திரு.யோகன் லோறன்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியானது நவம்பர் 2012 வரை ஏழு சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றனஎனவும் யோகன் லோறன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் ஆடை ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இவரிடம் வினவியபோதுஆடை ஏற்றுமதிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான புதிய சந்தை வாய்ப்புக்களை நாம் ஆராய்ந்து வருகிறோம். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்று மிகப் பெரிய சந்தை வாய்ப்பைக் கண்டறிவதென்பது மிகக் கடினமான பணியாகும்என யோகன் லோறன்ஸ் பதிலளித்துள்ளார்.
எதுஎவ்வாறிருப்பினும், ஏனைய நாடுகளின் உயர் உற்பத்தி செலவீனத்தால் நாம் சீனாவிடமிருந்து சில ஆடை ஏற்றுமதிக்கான கட்டளைகளைப் பெற்றிருந்தபோதும் அவை அவ்வளவு பெரிய சந்தை வாய்ப்புக்கள் அல்லஎனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாகிஸ்தானுக்கான ஆடை ஏற்றுமதி தொடர்பாக திரு.யோகன் லோறன்சிடம் கேட்டபோது, “பாகிஸ்தானிடமிருந்து நாங்கள் ஆடை ஏற்றுமதிக்கான எதுவித கட்டளைகளையும் பெற்றுக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் பெருமளவில் டெனிம் ஆடைகள் மற்றும் காலுறைகளையே அதிகம் ஏற்றுமதி செய்கின்றன. ஆனால் இவை சிறிலங்காவில் உற்பத்தி செய்யப்படவில்லைஎனவும் அவர் பதிலளித்தார்.
Previous
Next Post »

More News