அமெரிக்க செல்வரின் விபரிமான செவ்வாய் பயணத்திட்டம்


செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப அமெரிக்க செல்வந்தர் திட்டம்
விண்வெளிக்கு முதல் முறையாக சுற்றலா சென்ற அமெரிக்க செல்வந்தர் டென்னிஸ் டிட்டோ 2018 இல் செவ்வாய் கிரகத்திற்கு மனிதரை அனுப்பும் திட்டத்தை அறிவித்துள்ளார். 501 நாள் பயணமாக இருவரை செவ்வாய்க்கு அனுப்ப இவர் திட்டமிட்டுள்ளார்.

தனியார் நிதி மூலம் இந்த செவ்வாய் பயணத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள டிட்டோ 2018 ஆம் ஆண்டு தவறினால் 2031 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு மனிதரை அனுப்ப வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும் இந்தத் திட்டத்திற்கான செலவு விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. “ஒரு நல்ல திட்டத்திற்கு நிதி சேகரிப்பது கடினமான காரியம் அல்லஎன்று அவர் குறிப்பிட்டார்.

இதன்போது திருமணம் செய்த ஜோடியை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பவே டிட்டோ திட்டமிட்டுள்ளார். இதில் செவ்வாய்க்கு அனுப்பப்படும் விண்கலம் செவ்வாய் நிலத்தில் தரையிறங்காமல் அதன் ஈர்ப்பு விசையில் 100 மைல் உயரத்தில் செவ் வாயை சுற்றிவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் தயாரிக்கப் படவு ள்ளது. 72 வயதான டென்னிஸ் டிட்டோ 2001 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு சென்ற முதல் சுற்றுப் பயணியாக வரலாறு படைத்தவராவார்.

அவர் 20 மில்லியன் டொலர் தனது சொந்த செலவில் ரஷ்யாவின் சொயுஸ் விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுவந்தார்.
Previous
Next Post »

More News