2024 ஒலிம்பிக்கில்
கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சி
வரும்
2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க முயற்சிகள் நடப்பதாக
தெரிகிறது.
கடந்த
1900 பாரிஸ் ஒலிம்பிக்கில் முதன் முறையாக கிரிக்கெட்
இடம்பெற்றது. இதில் இங்கிலாந்து அணி,
பிரான்சை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன்
பின் கிரிக்கெட் நீக்கப்பட்டது. கடந்த 1998 கொமன்வெல்த் போட்டியில் மட்டும் கிரிக்கெட் இடம்பெற்றது.
ஒவ்வொரு
ஒலிம்பிக் போட்டிகளில் ஏதாவது புதிய விளையாட்டு
போட்டியை சேர்க்க முயற்சிகள் நடக்கும்.
இந்த வரிசையில் கிரிக்கெட்டையும் சேர்க்க வேண்டும் என
கோரிக்கை எழுந்தது. இதை, கடந்த 2010ல்
சர்வதேச ஒலிம்பிக் குழு (ஐ.ஓ.சி.) ஏற்றுக்கொண்டது. தவிர
ஐ.ஓ.சி.
யின் தலைவர் ஜாக்ஸ் ரோகியும்
2011ல் வரவேற்பு தெரிவித்து இருந்தார்.
இருப்பினும்,
இது கோரிக்கை அளவிலேயே இருந்து வருகிறது. இப்போது
வரும் 2024 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.)
விண்ணப்பித்துள்ளது.
இது குறித்து மெரில்போர்ன் கிரிக்கெட் கழகம் (எம்.சி.சி.) உலக கிரிக்கெட்
குழு வெளியிட்ட செய்தியில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவதை எம்.சி.சி.
வரவேற்கிறது. கிரிக்கெட்டின் சிகரமான “டுவென்டி-20” போட்டி முறையில் இதை
விளையாட வேண்டும். ஒருவேளை ஐ.ஓ.சி. ஏற்றுக் கொள்ளும்
பட்சத்தில் ஐ.சி.சி.க்கு சற்று வருமான
இழப்பு ஏற்படும். ஆனால் உலகளவில் கிரிக்கெட்
பரவ வழி ஏற்படும் என
தெரிவித்துள்ளது.
ConversionConversion EmoticonEmoticon