கிழக்காசிய நாடுகளில்
உள்ள விளையாட்டுக்களை நாங்கள் எடுத்துக்கொண்டால் கிறிக்கெட் தான் இன்று இந் நாடுகள்
முன்னிலையில் காணப்படுகின்றன.
குறிப்பாக, இந்தியா,
இலங்கை, பாகிஸ்தான், வங்களாதேஷ் என பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது எனலாம்.
இந்த வகையில் சகல
கிறிக்கெட் ரசிகர்களுக்கும் அறிமுகமானவரும் மற்றும் இனிமையான குரல் மூலம் எல்லோராலும்
பேசப்படும் ஒரு அறிவிப்பாளரை நாங்கள் இழந்து தவிக்கிறோம்.
இங்கிலாந்து
கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும்,
பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான டோனி க்ரெய்க் தனது
66வது வயதில் காலமானார்.
58 டெஸ்ட்
போட்டிகள் மற்றும் 22 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவர்
டோனி க்ரெய்க்.
தான் களத்தில் விளையாடிய காலத்தில்(1972-77) எதிரி அணிகளின் வீரர்களிடமும்
நெருக்கமான நட்பு பாராட்டியவர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியா-
பாகிஸ்தான் அணிகள் துபாயில் விளையாடிய
போது தான், அவருக்கு புற்றுநோய்
இருப்பதும்,
நோய் முற்றிய நிலையில் இருப்பதும்
தெரியவந்தது
இந்நிலையில்
நோயின் தாக்கம் தீவிரமடைந்த காரணத்தினாலேயே
மரணமடைந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ConversionConversion EmoticonEmoticon