கிழக்கு
மாகாண கல்விப் பணிப்பா ளராக
மீண்டும் எம்.ரீ. அப்துல்
நிஸாம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர்
றியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவின் அறிவுறுத்தலுக்கமைய
மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு
இந்நியமனத்தை வழங்கியுள்ளது.
இன்று முதல் (ஜனவரி 1) செயற்படும்
படியாக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கல்வி நிருவாக
சேவையின் சிரேஷ்ட முதலாந்தர அதிகாரியான
எம்.ரீ.ஏ. நிஸாம்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின்
பிரதி செய லாளராக இறுதியாக
கடமையாற்றியிருந்தார்.
நிந்தவூரைச்
சேர்ந்த எம்.ரீ.ஏ.
நிஸாம் 30 வருட அரச சேவையில்
ஆசிரியராக கோட்டக் கல்விப் பணிப்பாளராக
பிர திக் கல்விப் பணிப்பாளராக,
வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றியவராவார்.
இ.க.நி.
சேவை தரம் 1 இல் 11 வருடங்கள் சிரேஷ்ட சேவைக் காலத்தையுடைய
நிஸாம் முன்னர் சுமார் 2 வருட
காலம் கிழக்கு மாகாண கல்விப்
பணிப்பாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாகாண கல்விப் பணிப்பாளராக இருந்த
ஏ.எம்.ஈ.
போல் ஒப்பந்த சேவை யிலிருந்து
ஓய்வுபெறுவதால் இந்நியமனம் நேற்று மேற்கொள்ளப் பட்டுள்ளது.-
தினகரன்
ConversionConversion EmoticonEmoticon