பெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்திற்கு காரணமா?


சிறுவர் துஷ்பிரயோக குற்றங்களுக்கு பெற்றோரின் அலட்சியமும் ஒரு காரணம்
உலகில் நிலவுகின்ற சமூக சீர்கேடு களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விஷயமறிந்த பெற்றோரின் முக்கிய பிரச்சினைகளில் தமது பிள்ளையைப் பாதுகாப்பதும் ஒன்றாக உள்ளது.

உலகெங்கும் சிறுவர், சிறுமியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் சம்பவங் கள் பரவலாக இடம் பெறுகின்றன.

பாலியல் ரீதியாக சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தல் என்றெல்லாம் இன்றைய உலகில் சிறுவர்களுக்கு எதிரான சம்பவங்கள் காணப்படுகின்றன.

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது சிறுவர்களை தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். குறிப்பாக விபரமறியாத சிறுவர் சிறுமியரை வயதில் மூத்தவர் கள் தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர், துஷ்பிரயோகம் எனலாம்.

வயதில் முதிர்ந்த ஒருவர் சிறுவர் சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது , ஆபாசப் படங்களைக் காட்டுவது, தவறான நோக்கில் தொடுவது போன்ற இழி செயல்கள் இடம்பெறுவதை பத்திரிகைகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

இது சட்ட ரீதியில் பாரிய குற்றமாக இருப்பினும் இவ்விதம் பாதிப்புக்குள் ளாகுபவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் குடும்ப கெளரவத்திற்காக மூடி மறைக்க முற்படுவதனால் இந்தக் குற்றம் மேலும் பரவி வருகின்றது.

2006ல் . நா. வின் ஆய்வின்படி 18 வயதிற்குட்பட்ட 15 கோடி சிறுமி களும் 7 கோடி முப்பது இலட்சம் சிறுவர்களும் பாலுறவில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டதாக அல்லது வேறு விதமான பாலியல் கொடுமைக்கு ஆளாகியதாக கண்டுணரப்பட்டுள்ளது. மேலும் தற்போது சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 36% இற்கு அதிகமான பெண்களும் 29% அதிகமான ஆண்களும் தமது பிள்ளைப் பருவத்தில் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் துஷ்பிரயோகத்தி ற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இன்று இடம்பெறுகின்ற அநேகமான சிறுவர் துஷ்பிரயோகங்கள், கொடுமை கள் பெரும்பாலும் துஷ்பிரயோகத்தி ற்கு உள்ளாக்கப்பட்ட சிறுவர்களின் உறவினர்களாலேயே இழைக்கப்படு கின்றன. இது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது. இன்றைய ஆபாச சினிமாக்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் நிகழ்ச்சிகள் என்பன எரிகின்ற இந்தத் தீயில் எண்ணெய் வார்ப்பதாகக் காணப்படுகின்றது.

ஆண் பெண் இரு சாராரின் திரு மண வயதெல்லை உயர்ந்து செல்வது, நெருக்கமான குடும்ப அமைப்புக்கள் என்பனவும் இதற்கான வாய்ப்பையும், சூழலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. மதுபழக்கம் மற்றுமொரு அரக்கனாக மாறி இப்பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கான காரணங்களைக் கட்டாயமாக நாம் தேடிப்பார்க்க வேண்டும். வெள்ளம் வந்த பிறகு அணை கட்டுவதில் பயனில்லை. அசம்பாவிதம் நடக்க முன்னர் அதற்கான காணரத்தையும் தீர்வையும் ஆறிந்து அதன்படி செயற் படுவோடுவேமேயானால் இத்தகைய பாரிய குற்றச்செயல்கள் இடம் பெறு வதைத்தடுக்கலாம்.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம் பெறுவதற்கான அடிப்படைக் காரணங் கள் யாதென நோக்குவோமாயின் பெற்றோரின் போதிய பாரமரிப்பின்மை, பெற்றோரின் கவனக்குறைவு, பொரு ளாதாரப் பலவீனம், குடும்ப வன்முறை, சிறுவர்களின் அறியாமை, பெற்றோரின் விவாகரத்து தாய் வெளிநாட்டு வேலை வாயப்பினை நாடிச் செல்லல், போதை க்கு அடிமையாதல், தனிமைப்படுத்தப் படல் போன்ற பல விடயங்களை குறிப்பிடலாம்.

அதிகமான பெற்றோர் தமது பிள்ளை சிறு பிள்ளைதானே என்று சிறுவர்களின் நடவடிக்கைகளில் கவனக்குறைவாக இருந்து விடுவார்கள். இதேபோன்று அவர்களது ஆடைகள் விடயத்திலும் முக்கியமான கவனம் செலுத்தும் பெற்றோர் குறைவாகும். அழகு பார்க்கும் ஆடைகளே அவர்களுக்கு சிக்கல்களைத் தந்துவிடக்கூடும்.

சிறுவர்கள் எப்போதும் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்ப்பவர்களாகத் தான் இருப்பார்கள். தனிமைப்படுத்தப் படும் போது பெற்றோர் பாதுகாவலர் களிடம் இருந்து கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் யாரிடம் இருந்து கிடைக்கிறதோ அப்பக்கம் குழந்தை இலகுவாக ஈர்க்கப்படுவதுண்டு. இனிப்புக்கள் விளையாட்டுப் பொருட்களைக் காட்டி சிறுவர்களின் மனதை மாற்றும் தீயவர்கள் உள்ளன.

மறுபக்கம் தொலைபேசி, இணையத் தளங்களின் மூலமும் குழந்தைகளைக் குறிவைக்கும் சம்பவங்கள் நிலவுகின்றன. விஞ்ஞான வளர்ச்சி உச்சக்கட்டத்தை அடைந்து கொண்டு போகும் தற்காலத் தில் கையடக்கத் தொலைபேசிகள், கணனி ஆகியன நன்மை பயக்கும் அதே வேலை பயங்கர விளைவுக ளுக்கும் துணை போகின்றன என்ப தனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
Previous
Next Post »

More News