சமந்தா
ஸ்டோசரை வீழ்த்தி கிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி
ரஷ்யாவின்
மாஸ்கோ நகரில் கிரெம்ளின் கோப்பை
டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தொடரில்
மகளிருக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின்
11 ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின்
கரோலின் வோஸ்னியாக்கி முதல்நிலை வீராங்கனையான அவுஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசருடன் மோதினார்.
இப்போட்டியில்
வொஸ்னியாக்கி 6 – 2 என்ற கணக்கில் முதல்
செட்டைக் கைப்பற்றினார். சுதாரித்துக் கொண்ட ஸ்டோசர் இரண்டாவது
செட்டை 4 – 6 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
விறு விறுப்பாக நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி செட்டை
7 – 5 எனப் போராடி வென்ற வொஸ்னியாக்கி
6 – 2, 4 – 6, 7 – 5 என்ற கணக்கில் வெற்றிபெற்று கிரெம்ளின் கோப்பையை தனதாக்கினார்.
வெற்றிக்குப்
பின்னர் பேசிய வொஸ்னி யாக்கி
சரியான தருணங்களில் நான் சுதாரித்து ஆடி
புள்ளிகளை வென்றேன். நான் ஸ்டோசர் மீது
ஆதிக்கம் செலுத்த விரும்பினேன். ஆனால்
அவரும் சிறப்பாக ஆடினார் எளிதாக வெல்ல
முடியாது என எனக்கு தெரியும்.
ConversionConversion EmoticonEmoticon