பொத் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு எதிரான சம்பியன்ஸ்
லீக் 'டுவென்டி – 20' போட்டியில் முன்னணி விக்கெட்டுகளை இழந்த
டில்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி ஓவரில்
3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.
இதன் மூலம் டில்லி அணியின்
அரையிறுதி வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது.
அபாரமாக
ஆடிய சேவக் அணியின் வெற்றிக்கு
வித்திட்டார். பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி
அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. கேப்டவுனில்
நேற்று முன்தினம் நடந்த சம்பியன்ஸ் லீக்
'டுவென்டி – 20' தொடருக்கான 'ஏ' பிரிவு லீக்
போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் (இந்தியா)
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் (அவுஸ் திரேலியா) அணிகள்
மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற
டில்லி அணி தலைவர் மஹேல
ஜயவர்த்தன களத்தடுப்பை தேர்வு செய்தார்.
முதலில்
துடுப்பெடுத்தாடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு
கிப்ஸ் (6) ஏமாற்றினார். பின் இணைந்த ஷோன்
மோர்ஷ் சைமன் காடிச் ஜோடி
ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது.
டில்லி அணி பந்து வீச்சை
எளிதாக சமாளித்த இவர்கள் அணியின் ஸ்கோரை
மெல்ல உயர்த்தினர்.
பொறுப்பாக
ஆடிய இந்த ஜோடி இரண்டாவது
விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த போது
அகார்கர் வேகத்தில் ஷோன் மார்ஷ் (39) அவுட்டானார்.
சிறிது நேரத்தில் சைமன் கடிச் (34) வெளியேறினார்.
அடுத்து
வந்த லூக் ராஞ்சி (2) மோர்னே
மோர்கல் பந்தில் ஆட்ட மிழந்தார்.
சிறிது நேரம் தாக்குப் பிடித்த
மிட்சல் மார்ஷ் (20) மோர்னே மோர்கலிடம் சரணடைந்தார்.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்
கெட்டுக்கு 121 ஓட்டங்கள் எடுத்தது. தலைவர் மோர்கஸ் நார்த்
(8) நாதன் கவுல்டர்-நைல் (2) ஆட்டமிழக்காமல் இருந்தனர். டில்லி அணி சார்பில்
மோர்னே மோர்கல் 3, அகார்கர் 2 விக்கெட் கைப்பற்றினர்.
சுலப இலக்கை விரட்டிய டில்லி
டேர்டெவில்ஸ் அணிக்கு தலைவர் மஹேல
ஜயவர்த்தன (4) மோசமான துவக்கம் கொடுத்தார்.
அடுத்து வந்த உன்முக்த் சந்த்
(3) கெவின் பீட்டர்சன் (9) ரோஸ் டெய்லர் (5) ஏமாற்றினர்.
விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிய சேவக்
கவுல்டர் - நைல் பந்தில் சூப்பர்
சிக்சர் அடித்து அரைசதம் அடித்தார்.
இவருக்கு ஓரளவு ஒத்துழைப்பு தந்த
இர்பான் பதான் (14) ஆறுதல் தந்தார். செவக்
44 பந்தில் 52 ஓட்டங்கள் எடுத்து முக்கியமான நேரத்தில்
அவுட்டாக ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது.
அடுத்துவந்த
நமன் ஓஜா (6) நிலைக்கவில்லை. பின்
இணைந்த பவான் நேகி, அஜித்
அகார்கர் ஜோடி அணியை வெற்றிக்கு
அழைத்துச் சென்றது. கடைசி ஓவரில் 8 ஓட்டங்கள்
தேவைப்பட்ட போது ரிம்மிங்டன் வீசிய
முதல் பந்தில் அகார்கர் பவுண்டரி
அடித்தார்.
இரண்டாவது
பந்தில் ஒரு ஓட்டம் எடுக்க
3வது பந்தை எதிர்கொண்ட நேகி
பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி
செய்தார். டில்லி அணி 19.3 ஓவரில்
7 விக்கெட்டுக்கு 123 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நேகி
(7), அகார்கர் (11) அவுட்டாகாமல் இருந்தனர். பெர்த் அணி சார்பில்
ரிம்மிங்டன், மெனியா, பியர் தலா
2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருதை டில்லி அணியின்
அகார்கர் பெற்றார்.
ConversionConversion EmoticonEmoticon