வேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் கருவி கண்டுபிடிப்பு


நாளுக்கு நாள் வீதிகளில் விபத்துக்கள் நடாந்த வண்ணமுள்ளன. அதிலும் அதிகமான விபத்துக்கள் அதிவேகமாக வாகனத்தை செலுத்துவதன் ஊடாக இந்த வித விபத்துக்களின் இடம்பெறுவதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதிகபட்ச வேக அளவு என்பது மேலை நாடு களைப் பொறுத்த வரை மிகவும் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப் படும் போக்குவரத்து விதியாகும்.

இடைவெளி இருக்குமிடத்திலெல்லாம் வாகனத்தை நுழைத்துத் திருப்பும் நம்மூர் ஓட்டுனர்கள் பலருக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாது. நமது கார், நமது வீதி, நமது விருப் பமான வேகத்துக்கு ஓட்டலாம் என ஓட்டினால் மேலை நாடுகளில் பெருந் தொகை அபராதம் கட்டவேண்டியிருக்கும்.

வெளிநாடுகளில் வாகனங்களை குறிப்பிட்ட வேக அளவை விட அதிக வேகமாக ஓட்டுகிறோமோ எனும் பதற்றம் வாகன ஓட்டிகளிடம் சாதாரணமாகவே காணப்படும். அதுவும் புதிதாக ஒரு இடத்துக்குச் செல்கிறோம் எனில் வீதி யோரங்களில் இருக்கும் வேக குறியீட்டு எண்ணைக் கவனிக்காமல் சென்று மாட்டிக் கொள்ளும் சிக்கலும் இருக்கிறது.

இதனை எப்படி தவிர்ப்பது என யோசித்தவர்களின் சிந்தனையில் உதித்திருக்கிறது. புதிய கண்டுபிடிப்பு.

அதைக் கொண்டு புதிய கார் ஒன்றைத் தயாரித்து வெள்ளோட்டம் விட்டிருக்கின்றனர் இங்கிலாந்தில். இந்த வாகனம் தானாகவே வீதியோ ரங்களில் இருக்கும் வேக அளவைக் கண்டுபிடித்து அதை விட அதிக வேகத்தில் கார் சென்றால் வாகன ஓட்டுநரை எச்சரிக்கை செய்கிறது. வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு சிறிய கமரா வீதியோரத்தில் இருக்கும் குறியீடுகளை வினாடிக்கு முப்பது எனுமளவில் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறது.

இவற்றிலிருந்து வேக எண் அடங் கிய குறியீடுகள் வாகனத்திலுள்ள ஒரு மென்மொருளினால் எண்ணாக மாற் றப்படுகிறது. அந்த வேகம் வாகனம் சென்று கொண்டிருக்கும் வேகத்துடன் ஒப்பிடப்பட்டு அதிக வேகமெனில் எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது. கூடவே செல்ல வேண்டிய வேகமும் வாகனத்தில் தெரிகிறது.

மிக மிக அவசியம் என்பதாலும், இல்லையேல் தண்டம் வழக்கத்தைவிட பலமடங்கு கட்ட வேண்டியிருக்கும் என்பதாலும் இந்த கருவி ஓட்டுநர்களி டம் பெரும் வரவேற்பைப் பெறும் என கருதப்படுகிறது.

ஓட்டுநருக்கு சாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட அதிக பட்ச வேகம் என்ன என்பதை கவனிக்க வேண்டிய வேலை இதனால் மிச்சமாகிறது. வாகனமே வேடிக்கை பார்த்து விஷயத்தைச் சொல்லும் பணியை எடுத்துக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு யூகேவிலுள்ள வேகக் குறியீடுகளை மட்டுமே இந்த மென்பொருள் உணர்ந்து கொள்கிறது.
Previous
Next Post »

More News