குவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு வழக்கு


குவாரி ஊழல் மோசடி தொடர்பாக பி.ஆர். பழனிச்சாமி, துரை தயாநிதி ரூ. 5 ஆயிரம் கோடி வரி மோசடி
துரை மேலூர் பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்பட்ட 94 கிரனைட் குவாரிகள் சீல் வைக்கப்பட்டன. அதிக முறைகேட்டில் ஈடுபட்ட பி.ஆர்.பி. கிரனைட் நிறுவன அதிபர் பி.ஆர். பழனிசாமி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஒலிம்பஸ் கிரனைட் இயக்குநர் மத்திய மந்திரி மு.. அழகிரியின் மகன் துரைதயாநிதி உள்ளிட்ட கிரனைட் அதிபர்கள் 40 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களது சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிரானைட் மோசடி தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த சிறப்பு அதிகாரி ஜான்லூயிஸ் அரசால் நியமிக்கப்பட்டார். இவர் சில வாரங்களாக மேலூர் பகுதிகளில் முகாமிட்டு கிரனைட் குவாரிகளில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது பி.ஆர். பழனிச்சாமியின் பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனம் மற்றும் துரைதயாநிதியின் ஒலிம்பஸ், சிந்து கிரனைட் நிறுவனங்கள் அதிக அளவில் சட்டவிரோதமாக கிரனைட் கற்களை வெட்டியது தெரிய வந்துள்ளது. இந்த வகையில் ரூ. 5 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பு மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இது சம்பந்தமாக விசாரணை அதிகாரிகள் அரசுக்கு முழுமையான அறிக்கை அனுப்பி உள்ளனர்.

இந்த அறிக்கையின் அடிப்படை யில் வரி ஏய்ப்பு மோசடி தொடர் பாகவும், அந்நிய செலாவணி குறி த்து விசாரணை நடத்தவும் மத்திய அமுலாக்கப் பிரிவுக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.

இதையடுத்து மோசடி கிரனைட் நிறுவனங்களின் அனைத்து விவரங்களையும் மத்திய அமுலாக்கப் பிரிவு தமிழக அரசிடம் இருந்து பெற்றுள்ளது. கிரனைட் நிறுவனங்களின் வரி ஏய்ப்பு மற்றும் அந்நிய செலாவணி தொடர்பாக மத்திய அமுலாக்கப் பிரிவு அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

துரை தயாநிதி தன் மீதான வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயாராகு கின்றார். துரை தயாநிதி விரைவில் பொலிஸில் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Previous
Next Post »

More News