இலங்கையில் நீதித்துறை பெரும் பின்னடைவுக்குச் சென்றுள்ளது – IFHR



இன்று நாட்டில் கைதுகள், கடத்தல்கள் மற்றும் கொலைகள், நீதித்துறை சுதந்திரம், ஊடக சுதந்திரம், மீள்குடியேற்றம் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் கவலைகள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளதுடன் நீதித்துறை சுதந்திரம் கடந்த  10 மாதங்களில் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. என்று புத்திஜீவிகளுக்கான மனித உரிமைகள் (ஐஎவ்எச்ஆர்) அமைப்பு தெரிவித்துள்ளது.

 இது தொடர்பாக சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்த மனித உரிமைகள் நிலவரம் சட்டத்தின் ஆட்சி, தனிநபர் சுதந்திரம் ஒரு முன்னோடியில்லாத நிலைமையில் சென்றுக்கொண்டிருக்கின்றது நீதித்துறை சுதந்திரமானது முதல் 10 மாதங்களில் ஒரு பெரும் பின்னடைவை சந்தித்ததுள்ளது.

மேலும், இந்த காலப்பகுதியில் 148 பெண்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் 408 பாலியல் பலாத்கார சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன அவைதொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டபோதிலும் 10 வழக்குகளே நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Previous
Next Post »

More News