சேமித்தால் சிறப்பு வருமா?



கணேசன், ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எழுதுவினைஞராக வேலை பார்த்து வந்தான். அன்று வான் ஒன்று வீட்டு வாசலில் வந்து நின்றது. அதில் ஒரு சாப்பாட்டு மேசையும் ஒரு சைக்கிளும் வந்திருந்தது. மனைவி சங்கரியும், மகன் சுரேஷ¤ம் வாசலில் வந்து நின்று வேடிக்கை பார்த்தனர். சங்கரி கணவருடன் சேர்ந்து அந்த பொருட்களை இறக்கிக்கொண்டே, “என்னங்க சாமான்களின் விலை எவ்வளவு?” என்று கேட்டாள்.

சாப்பாட்டு மேசை 5 ஆயிரம் ரூபா, சைக்கிள் 5 ஆயிரம் ரூபா 10 ஆயிரம் ரூபாஎன கணேசன் கணக்கு சொன்னான்.

உடனே சங்கரி, “உங்களுக்கு கிடைக்கக்கூடிய சம்பள பணமோ குறைவு. இப்போ இந்த பொருட்களெல்லாம் தேவைதானா?” என்றாள்.

நம்ம சுரேஷ் அடுத்த வருஷம் பள்ளிக்கூடத்திற்கு படிக்கப்போவான். அப்போ சைக்கிள் தேவைப்படும். தவணைக்குத்தான் வாங்கியிருக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாக கட்டினாலே கழிந்து விடும.

சம்பளத்தில் வாடகை கொடுக்கணும். பலசரக்கு கடைக்காரன், பால்க்காரி, பேப்பர்க்காரன் எல்லாருக்கும் பாக்கி கொடுக்கணும். இதற்கிடையே இந்த அதிகப்படியான செலவு தேவைதானா?” என்று அலுத்துக் கொண்டாள் சங்கரி.

அடுத்தமாதம் எனக்கு சம்பளம் கூடுகிறதாம். சமாளித்துவிடலாம்.

கணவன் பேச்சில் சமாதானம் அடையாத சங்கரி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் அடுக்களைக்குள் போய் பதுங்கிக் கொண்டாள்.

இரண்டு வாரம் கழித்து ஒரு நாள், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணேசன் கையை பிசைந்துகொண்டு நின்றான்.

என்னங்க ஒரு மாதிரி நிற்கிaங்க. என்ன விஷயம் என்று கேட்டாள்.

ஒண்ணுமில்லை சங்கரி, என்னை வேறு கிளைக்கு மாத்திவிட்டார்கள். இரண்டு நாளில் போகணுமாம்என்றான்.

சங்கரி விக்கித்துப் போனாள். “இப்போ என்னங்க செய்றது. ஊர் மாறிப் போனால் புது வீடு பிடிக்கணும். முற்பணம் கொடுக்கணும், நிறைய செலவு வரும். இப்போது என்ன செய்யப் போaங்க?”என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்டாள்.

என் நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். பயப்பட வேண்டாம்என்றான் கணேசன்.

விஷயம் அறிந்ததும் மறுநாள் வீட்டு உபயோகப் பொருள் வியாபாரி, இரண்டு மூன்று பேருடன் கணேசன் வீட்டிற்கு வந்துவிட்டான். “நீங்கள் மாற்றலாகிப் போனால் உங்களிடம் பணம் வசூலிக்க முடியாது. எங்களுக்கு இப்பவே முழு தொகையையும் கட்டி விடுங்கள்என்றான் வியாபாரி.

கணேசன், விளி பிதுங்கி நின்றான். “நானே வீடு மாறக்கூட பணம் இல்லாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் டயம் கொடுங்க, எப்படியும் கட்டிடறேன் என்றான். “அதெல்லாம் முடியாது. பணத்தைக்கொடுங்க. இல்லாவிட்டால் பொருளைக் கொடுங்கஎன்றான் வியாபாரி.

சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் கூடி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

திடீரென ஆவேசம் வந்தவளாக வீட்டிற்குள் சென்றாள் சங்கரி. ஒரு தகர உண்டியலை எடுத்துக் கொண்டு ஓடிவந்தவள் அதை கணவரிடம் கொடுத்து உடைக்கச் சொன்னாள். உண்டியலை உடைத்து எண்ணியதில், 8 ஆயிரமும், கொஞ்சம் சில்லரையும் இருந்தது. அதில் வியாபாரிக்கு மொத்த பணத்தையும் கட்டி ரசீது வாங்கினான்.

இவ்வளவு பணம் எப்படி சேமித்தாய் சங்கரி”? கூட்டம் கலைந்ததும் மனைவியிடம் பிரமிப்பாய்க் கேட்டான் கணேசன்.

நம்ம சுரேஷ்தான் சேமிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தான். ஒருநாள் சேமிப்புபற்றி அவனது ஆசிரியை சொல்லிக் கொடுத்ததும், அன்றே ஒரு டப்பாவில் சேமிக்க ஆரம்பித்தான். அவனுடன் சேர்ந்து நானும், நீங்க அப்பப்போ செலவுக்கு கொடுக்கிற பணத்தையும், மளிகை சாமான் வாங்கியதுபோக மீதி சில்லறைகளையும் உண்டியிலில் போட்டு வைத்தேன். அதுதான் அவசரத்துக்கு கைகொடுத்தது என்றாள் சங்கரி.

ஆமாம் சங்கரி, சேமிப்புதான் சமயத்தில் கைகொடுக்கும். பணம் இல்லாவிட்டால் இக்காலத்தில் மதிப்பில்லைஎன்று மனைவியின் பேச்சை ஆமோதித்தபடி மகன் சுரேசை கட்டிப்பிடித்தான்.

Previous
Next Post »

More News