வெள்ளவத்தை
பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகரொருவரை காருடன்
கடத்திச் சென்ற கொள்ளையர்கள் சிலர்,
அதிலிருந்த 60 இலட்சம் ரூபாவை கொள்ளையிட்டு,
காருக்கும் தீ வைத்துவிட்டு தப்பிச்
சென்றுள்ளனர்.
அவருடைய
கையடக்கத் தொலைபேசி
சார்ஜர் வயரொன்றினால் குறித்த வர்த்தகரின் கழுத்தை
நெரித்துள்ள கொள்ளையர்கள், அவர் மயக்கமுற்றதை அடுத்து
காருடன் கடத்திச் சென்றே இந்த கொள்ளையில்
ஈடுபட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள்
மயக்கமுற்ற வர்த்தகரை
வெலிபன்ன, ஹேன்பிடி பகுதியில் வைத்து காரிலிருந்து இழுத்து
வெளியே வீசிவிட்டு பணத்தைக் கொள்ளையிட்டதன் பின்னர், குறித்த காரை தீயிட்டுள்ளனர்
என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த
சம்பவம் தெற்கு அதிவேக
நெடுஞ்சாலையினூடாகவே மேற்படி கொள்ளையர்கள் வர்த்தகரை
காருடன் கடத்திக்கொண்டு வெலிபன்னவுக்குச் சென்றுள்ளனர் என்று பொலிஸாரின் முதற்கட்ட
விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இதில்
பாதிக்கப்பட்ட வர்த்தகர்
நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெலிபன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ConversionConversion EmoticonEmoticon