சர்வதேச நீர் முகாமைத்துவ நிலையம் சர்வதேச விருதினை பெற்றுள்ளது


 நீரியல் ஆய்வுக்கான உலகின் மதிப்பார்ந்த விருதினை இலங்கையிலுள்ள நிலையம் வென்றுள்ளது
லங்கையிலிருந்து செயற்படும் சர்வதேச நீர் முகாமைத்துவ நிலையம்  (IWMI) கடந்த மாதம் ஸ்டொக்ஹோம் நகரில் நடைபெற்ற வருடாந்த உலக நீர் வார நிகழ்வில் மதிப்பார்ந்த ஸ்டொக்ஹோம் நீரியல் விருதை வென்றது.

ஓகஸ்ட் 30 ஆம் திகதி ஸ்டொக்ஹோம் நகர மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில்  (IWMI) பணிப்பாளர் நாயகம் கலாநிதி கொலின் சாட்டர்ஸ் இந்த விருதை சுவீடின் மன்னர் மாட்சிமை தங்கிய 16 ஆவது கார்ல் குஸ்தாவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

கலாநிதி சாட்டர்ஸ் இது பற்றித் தெரிவிக்கையில், “இது எம் அனைவருக்கும் அளிக்கப்பட்ட மகத்தான கெளரவமாகும். IWMI  அமைப்பின் பணிகளை அங்கீகரித்து இந்த விருதை வழங்கிய விருதுக்குழுவிற்கு எனது நன்றி உரித்தாகுக. உண்மையில் இந்த வெற்றியானது அர்ப்பணிப்புடன் செயற்படும் IWMI  ஊழியர்களேயே சாரும். கடந்த ஒரு கால் நூற்றாண்டு காலமாக அவர்கள் மிகவும் தரமுயர்ந்த விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது ஆய்வுகள் உலகெங்கிலும் கடைப்பிடிக்கப்படும் நீர் முகாமைத்துவக் கொள்கைகள் மீது பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றன. வளர்முக நாடுகளிலுள்ள வறிய மக்கள் உண்மையான நன்மைகளை அடைந்துள்ளனர்.

இலங்கையில் எமது பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் பங்காளிகளுக்கும் நான் இச் சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். கடந்த பல வருடங்களாக பல்வேறு அமைச்சுக்கள், முகவர் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பும் எமது வெற்றிற்குக் காரணமாகும்என்று கூறினார்.

சர்வதேச நீரியல் முகாமைத்துவ நிலையம்  (IWMI) என்பது வளர்முக நாடுகளில் வறிய மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய விதத்தில் காணி மற்றும் நீர் வளங்களை நிலைபெறுதகு முறையில் பயன்படுத்துவது தொடர்பாகக் கவனம் செலுத்தும் இலாப நோக்கமற்ற, விஞ்ஞான ஆராய்ச்சி நிலையமாகும். “உணவுற்பத்தி, வாழ்வாதாரங்கள் மற்றும் சூழல் நலத்திற்காகக் காணி மற்றும் நீர் வாங்களின் முகாமைத்துவத்தை முன்னேற்றுவதுஅதன் குறிக்கோளாகும்.

IWMI  அதன் தலைமை அலுவலகத்தைக் கொழும்பிலும் பிராந்திய அலுவலகங்களைப் பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளிலும் கொண்டுள்ளது. வறுமை ஒழிப்பு, உணவு மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பு என்பவற்றிற்கு உதவக்கூடிய வழிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை வகுப்பதற்காக இந்த நிலையம் பல்வேறு வளர்முக நாடுகள், சர்வதேச மற்றும் தேசிய ஆய்வு நிலையங்கள், ஏனைய பொது அமைப்புக்கள் என்பவற்றுடன் இணைந்து பணியாற்றுகின்றது. அதன் இணையத்தளம் www.iw.mi.org

விgiar என்பது நிலைபெறுதகு அபிவிருத்திக்காக ஆய்வு முயற்சிகளில் ஈடுபடும் அமைப்புக்களை ஒருங்கிணைக்கும் உலகளாவிய ஆராய்ச்சிப் பங்காளித்துவ அமைப்பாகும். கிராமப்புற வறுமைத் தணிப்பு, உணவு உற்பத்தியின் அதிகரிப்பு, மனித உடல்நலம் மற்றும் போக்கின் மேம்பாடு, இயற்கை மூலவளங்களின் நிலைபெறுதகு முகாமை ஆகிய விடயங்களில் அதன் ஆய்வுகள் கவனம் செலுத்துகின்றன.

இந்த ஆய்வுகள், தேசிய மற்றும் பிராந்திய ஆராய்ச்சி நிலையங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், கல்விமான்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கொன்சோட்டியத்தில் அங்கம் வகிக்கும் 15 நிலையங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன.
Previous
Next Post »

More News