இசையின் உதவியுடன் மோனா லிஸா ஓவியம் வரையப்பட்டதா?



ஐரோப்பாவில் உருவான மறுமலர்ச்சிக் காலப் பகுதியில் புகழ்பெற்றுவிளங்கிய அறிஞர்களின் பெயர்கள் இன்றும் வரலாற்றில் அழியா இடத்தைப் பிடித்துள்ளன.

அவர்களில் மங்காத புகழ்பெற்றவர் லியனாடோ டாவின்ஸி ஆவார்.

பதினைந்தாம் நூற்றாண்டில் அவர் வரைந்த மோனாலிசா ஓவியம் உலகப் புகழ்பெற்ற ஓவியமாகும். மோனாலிசா இத்தாலிய நாட்டைச் சேர்ந்தவராவார்.

இந்த ஓவியத்தை வரைய எடுத்துக்கொண்ட நான்கு ஆண்டுகால கட்டத்தில் மோனாலிசாவின் முகத்தில் வசீகரமான புன்னகையை வரவழைக்க இனிய இசையை ஓடவிட்டு ஓவியத்தை வரைந்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஓவியம் பாரிஸ் நகரின் தொல்பொருள் காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Previous
Next Post »

More News