வங்கக்கடலில்
புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு
நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தென்
தமிழகக் கடலோரப் பகுதிகளிலும் இலங்கையின்
வடக்கு கிழக்க கழைரயோரப் பகுதிகளிலும்
லேசான மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து
சென்னை வானிலை ஆய்வு மையம்
வெளியிட்ட அறிக்கையில்,
எமது வங்கக்
கடலில் இலங்கைக்கு கிழக்கே குறைந்த தாழமுக்கம்
உருவாகியுள்ளது. இதன் காரணமாக தென்
தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில்
மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இலங்கையின் கடற்
கரையோரங்களிர“ பலமான கடல்
காற்று வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையில்
இருந்து மணிக்கு 45 மணி முதல் 55 கிலோ
மீட்டர் வேகத்தில் தென் தமிழக கடலோர
பகுதிகளில் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புயல் சின்னம் காரணமாக
கன்னியாகுமரி மாவட்டத்தில் பயங்கர சூறாவளிக் காற்று
வீசி வருகிறது. கடலும் கடும் கொந்தளிப்புடன்
காணப்படுகிறது.
மேலும், இந்த அமுக்கம்
காரணமாக மீனவர்கள் கடலுக்குள் போகவில்லை. கடல் சீற்றம் காரணமாக
கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.
ConversionConversion EmoticonEmoticon