இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்


இலங்கை முழுவதிலும் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் சுகாதார பரிசோதகர் சங்கம் தனது கவலையை தெரிவிதுள்ளது.
இன்று இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எலிக் காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார பரிசோதகர் சங்கம் மேலும் விசனம் தெரிவித்துள்ளது.

இங்குள்ள  வைத்தியசாலையில் எலிக்காய்ச்சல் நோயாளிகள் நூற்றுக்கும்  மேற்பட்டோர் பதிவாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல் கூறுகின்றனர்.

இந்த நோய்க் குறிகளை உடனடியாக அடையாளம் காணாவிட்டால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் அறிகுறிகளாக கடுமையான தலைவலி, தசை வலி, கடுமையான காய்ச்சல், சிறு நீரின் நிறமாற்றம், சிறு நீருடன் இரத்தம் வெளியேறுதல் போன்ற நோய்க்குறிகள் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக உடனடியாக சிகிச்சை பெற்றுக்கொள்ளாவிட்டால் மூளை உள்ளிட்ட உடல் பாகங்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடுமெனத் இந்த சங்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Previous
Next Post »

More News