மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோறுக்கு Antigen பரீசோதனை மேற்கொள்ளப்படும்

மேல் மாகாணத்திலிருந்து வௌியேறுவோருக்கு மேற்கொள்ளப்படும் Antigen பரிசோதனை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எழுமாறாக மேற்கொள்ளப்படும் Antigen பரிசோதனையில் எவருக்கேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார். அவருடன் தொடர்புடைய ஏனையவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


மேல் மாகாணத்திலிருந்து வௌி மாவட்டங்களுக்கு செல்வோரால் ஏற்படக்கூடிய கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன குறிப்பிட்டார்.


நேற்றைய தினம் 451 பேருக்கு Antigen பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவே​ளை, தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை அனைத்து சந்தர்ப்பங்களிலும் தம்வசம் வைத்திருக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார்.


உங்களுடைய பெயர், முகவரி, அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகிய விடயங்கள் அடங்கிய ஆவணத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.


Colombo (News 1st)

Previous
Next Post »

More News