மலேசியாவில் அல்லாஹ் என்ற சொல்ல பயன்படுத்த தடை

முஸ்லிம் நாடாக இருக்கும் மலேசியாவில் கடவுளை குறிப்பதற்கு "அல்லாஹ்" எனும் சொல்லை பயன்படுத்த தங்களுக்கும் உரிமையுண்டு என்று கோரி அங்குள்ள கத்தோலிக்கத் திருச்சபையினர் நாட்டின் அதியுயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

மலேசியாவின் பேராயர் இந்த விஷயத்தை ஃபெடரல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார். முஸ்லிம்களுக்கு மட்டுமே இறைவனை குறிக்க அல்லா எனும் வார்த்தையை பயன்படுத்த உரிமை உண்டு என பிரதமர் நஜீப் கூறுவது கண்டிக்கத்தக்கது என்றும்,சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியளிக்கிறது என்றும் பேராயர் மர்ஃபி பாக்கியம் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மலேசிய உயர்நீதிமன்றம் "அல்லாஹ்" என்னும் சொல்லை அனைத்து மதத்தினரும் பயனபடுத்தலாம் என மலேஷிய உயர்நீதிமன்றம் நீதிமன்றம் ஏற்கெனவே அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக, ஆளும் அம்னோ அரசு மேல்முறையீட்டு நீதிமன்றம் சென்றதைத் தொடர்ந்து அந்தத் தீர்ப்பு ரத்தானது.

இப்போது அதற்கு எதிராக நாட்டின் அதியுயர் நீதிமன்றத்துக்கு வழக்கு சென்றுள்ளது.

பல மதங்களின் நூல்களில் அல்லா எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கத்தோலிக்கத் திருச்சபையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாக இந்த வழக்குடன் தொடர்புடையவரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான சார்லஸ் சந்தியாகோ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

சவுதி அரேபியா, இந்தோனேஷியா, இந்தியா உட்பட பல நாடுகளில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மற்ற மதத்தவர் அல்லா எனும் சொல்லை பயன்படுத்தத் தடையில்லை என்று கூறியிருந்தாலும், மலேசியாவை ஆளும் கூட்டணி இதை அரசியலாக்குகின்றனர் எனவும் சந்தியாகோ சுட்டிக்காட்டினார்.


இதனிடையே கத்தோலிக்கத் திருச்சபை செய்துள்ள மேல்முறையீட்டை அந்த ஃபெடரல் நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என மலேசியாவின் ஆறு மாநிலங்களிலுள்ள இஸ்லாமிய மன்றங்களும் ஒரு சீன முஸ்லிம் அமைப்பும் கோரியுள்ளன.
Previous
Next Post »

More News