சிரிக்க
மட்டும் (ஆசிரியர் , மாணவன் நகைச்சுவை):-
டீச்சர்:
பாபு, கண்ணை மூடி சாமி
கும்பிட்டியே... என்ன வேண்டிக்கிட்ட?
வாண்டு
பாபு: இந்த பள்ளிக்கூடத்துல எல்லா
வகுப்புகளுக்கும் நீங்களே டீச்சரா இருக்கணும்னு
வேண்டிக்கிட்டேன்.
டீச்சர்:
உன்னை மாதிரி மாணவன் கிடைக்க
நான் கொடுத்து வச்சிருக்கணும். சரி எதுக்காக இப்படி
வேண்டிக்கிட்ட?
பாபு: நான் பெற்ற துன்பம்
எல்லாரும் பெறட்டுமேன்னு தான்!
டீச்சர்:
இந்தப் பறவையோட காலைப் பார்த்து
இது என்ன பறவைன்னு கண்டுபிடி
பார்ப்போம்"
வாண்டு
பாபு: "தெரியலை"
டீச்சர்:
"இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு
என்னடா?"
வாண்டு:
"என் காலைப் பார்த்து நீங்களே
கண்டுபிடிங்க பார்ப்போம்!!"
டீச்சர்:
???
ஆசிரியர்
: விலங்குகளின் கண்களுக்கு அதிக சக்தி உள்ளது
என்று எப்படிச் சொல்கிறாய் பாபு?
வாண்டு
பாபு : அதுங்கதான் கண்ணாடியே போடறதில்லையே டீச்சர்!
டீச்சர்:
???
கணக்கு
டீச்சர்: பாபு, உன்கிட்ட முதல்ல
2 முயல் தர்றேன், அப்புறம் 2 முயல் தர்றேன், கடைசியா
2 முயல் தர்றேன். இப்போ உன்கிட்ட எத்தனை
முயல் இருக்கும்?
வாண்டு
பாபு: 7 முயல் இருக்கும் டீச்சர்!
டீச்சர்:
என்ன? நல்லா கூட்டிப் பாரு
6 முயல் இருக்கும்.
பாபு: இல்ல டீச்சர், 7 முயல்
இருக்கும்!
டீச்சர்:
எனக்கு கோபம் வருது பாபு...
எப்படி 7 இருக்கும்?
பாபு: எங்க வீட்ல ஏற்கனவே
ஒரு முயல் இருக்கு. நீங்க
கொடுக்குற 6 முயலோட அதையும் சேர்த்தா
7 தானே இருக்கும்....!
டீச்சர்:
???
ஆசிரியர்:
டேய் பாபு.. டீச்சர்னு மரியாதை
இல்லாம என் மேல சைக்கிளால
மோதுன?
வாண்டு
பாபு: பிரேக் புடிக்கல சார்
ஆசிரியர்:
பிரேக் புடிக்குதே...
வாண்டு:
பிரேக்கை நான் புடிக்கல சார்!
ஆசிரியர்:???
டீச்சர்:
படிச்சு முடிச்சதும் என்ன செய்யலாம்னு இருக்க
பாபு?
வாண்டு
பாபு: புக்கை மூடிடலாம்னு இருக்கேன்!
டீச்சர்:
???
ஆசிரியர்:
நியூட்டன் ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருக்கும்போது,
அவர் தலையில் ஒரு ஆப்பிள்
விழுந்தது. அவர் புவியீர்ப்பு விசையைக்
கண்டுபிடித்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
வாண்டு
பாபு: இப்படி வகுப்பறையில உட்கார்ந்துக்கிட்டு
புத்தகத்தைப் புரட்டிக்கிட்டு இருந்தா ஒன்னும் கண்டுபிடிக்க
முடியாதுன்னு தெரியுது.
ஆசிரியர்:???
ConversionConversion EmoticonEmoticon