அறுபத்தினான்கு கலைகள் சித்திரக்கலையும் ஒன்றாகும். இந்தக் கலை
பொதுவாக இயற்கையாகவே பலரிடரித்தில் காணப்படுகின்றது இருந்தும் அவற்றை வாண்மையடைச் செய்வது
சிறந்ததாகும். அதிலும் குறிப்பாக ஆசிரியர் தொழிலுக்கு வரும் அனைவருக்கும் இது முக்கியமானது..
இதனை
அறிந்த சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் அவர்களின் ஆலோசனையின்
பேரில் 2013.11.09, 10 ஆந் திகதிகளில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில்
சித்திரப் பாட ஆசிரியர்களுக்கு வாண்மை விருத்தி கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வுற்கு
வளவாளர்களாக இந்தியாவில் பயிற்சி பெற்ற இலங்கை வளவாளர்கள் செய்முறைப் பயிற்சி மூலம் செய்து காட்டினார்கள் குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும்,
இக்கருந்தரங்கின் ஒழுங்கமைப்பாளராக சித்திரப்
பாட ஆசிரிய ஆலோசர் திருமதி எஸ். ஆதம்லெவ்வை
மற்றும் ஆசிரிய ஆலோசகர் எஸ். ருத்ராவும் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டது.
அத்துடன் பல பாடசாலை ஆசிரியர்களுடன் இணைந்து சம்மாந்துறை
முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல்
– ஏ.எம். தாஹாநழீம்
ConversionConversion EmoticonEmoticon