- · இது இயற்கை அழகு மிக்கது. இதனை ஸ்ரீலங்கா, இரத்தினதுவீபம், தப்பிரபேன், ஈழம் என்றும் அழைப்பர்.
- · இலங்கை நாற்புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும்.
- · இது இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்துள்ளது.
- · இலங்கையில் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர் எனப்பல இனத்தவர் வாழ்கின்றனர்.
- · இலங்கையில் இருந்து தேயிலை, இறப்பர், தைத்த ஆடைகள் என்பன ஏற்றுமதியாகின்றன.
- · இலங்கையில் பேதுருதாலகால, சிவனொளிபாதம் போன்ற பெரிய மலைகள் உள்ளன.
- · இங்கு மகாவலிகங்கை, களனிகங்கை, மாணிக்க கங்கை போன்ற ஆறுகள் பல உள்ளன.
- · இலங்கையின் தலைநகர் ஸ்ரீஜயவர்த்தனபுர ஆகும்.
- · கொழும்பில் அரசாங்க அலுவலகங்கள் பல உள்ளன.
- · இலங்கையில் அழகான நீர்வீழ்ச்சிகள் பல உள்ளன.
- · பிற நாடுகளில் இருந்து உல்லாசப் பயணிகள் பலர் இங்கு வருகின்றனர்.
- · இவர்கள் நுவரெலியா, பாசிக்குடா, ஹிக்கடுவை, நீர்கொழும்பு,
- · திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களுக்குச் செல்கின்றனர்.
- · இலங்கையின் இயற்கை அழகு உல்லாசப் பயணிகளைப் பெரிதும் கவர்கிறது.
- · இந்து சமுத்திரத்தின் முத்து என்று இலங்கையை எல்லோரும் போற்றுகின்றனர்.
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
Subscribe to:
Post Comments (Atom)
ConversionConversion EmoticonEmoticon