மாணவர்களை
வேலை உலகுக்கும், தொழில்நுட்ப உலகுக்கும் அறிமுகப்படுத்தும் செயற்பாடாக இப் பாடத்துறை கல்வி
அமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்வி அறிவைப் பெறுவதுடன்
செயன்முறை அனுபவங்களையும் பெற வழிகிடைக்கின்றது.
எனவே இத்துறையின் அறிமுகத்தினால் எதிர்காலத்தில் கலைத்துறையை தெரிவு செய்யும் மாணவர்களின்
அளவு குறைவதுடன், தொழில்நுட்பவியல், விஞ்ஞானத்துறை என்பவற்றை தெரிவு செய்யும் மாணவர்களின்
அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே எதிர்காலத்தில் தொழில்நுட்பத்திறன் கொண்ட பட்டதாரிகளை உருவாக்க
வழிவகுப்பதுடன் நாட்டின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கு ஆக்கத்திறன்,
வினைத்திறன் கொண்ட ஊழிய பங்களிப்பும்
பெற்றுக்கொள்ளப்படும்.
இப் பாடத்துறையும் கலை, வர்த்தகம், கணிதம்,
உயிரியல் போன்ற ஒரு துறையாக
கருதப்படுகின்றது. இப் பாடத்துறை கல்வி
அமைச்சு, இளைஞர் அலுவல்கள் மற்றும்
திறன் அபி விருத்தி அமைச்சு
ஆகியவற்றின் அனுசரணையுடன் செயற்படுத்தப்படுகின்றது.
ட்டில்
முதல்கட்டமாக 200 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு இத்
துறை நடைமுறைப்படுத்தப்படும். முக்கியமாக ஒரு தொகுதிக்கு ஒரு
பாடசாலை என தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்பாடத்துறைக்கு
அனுமதி பெற அடிப்படை தகுதியாக
க.பொ.த
(சா/த) பரீட்சையில் கணிதம்,
விஞ்ஞானம் உட்பட ஆறு பாடங்களில்
சித்தியடைவதுடன் யாதாயினும் மூன்று பாடங்களில் திறமைச்சித்தி
பெற்றிருப்பதும் அவசியமாகும். இப்பாடத்துறை இரு பிரிவுகளாக அமைந்திருக்கும்.
01. பொறியியல்
தொழில்நுட்ப பிரிவு.
02. உயிரியல்
முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு.
பொறியியல்
தொழில்நுட்ப பிரிவில் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தையும், உயிரியல் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் உயிரியல் தொகுதி தொழில்நுட்ப பாடத்தையும்
தெரிவு செய்வதுடன் மேலும் இரு பிரிவுகளும்
தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் (கணிதம், பெளதிகம், இரசாயனவியல்,
உயிரியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய
சேர்மானம்) எனும் பாடத்தையும், மற்றும்
கீழ் வரும் பாடத்தொகுதியில் ஏதாவது
ஒரு பாடத்தையும் தெரிவுசெய்தல் வேண்டும்.
பாடத்தொகுதி
01. பொருளியல்
02. புவியியல்
03. மனைப்
பொருளியல்
04. ஆங்கிலம்
05. தொடர்பாடல்
மற்றும் ஊடகத்துறை
06. தகவல்
மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்
07. சித்திரம்
08. வணிகக்
கல்வி
09. விவசாய
விஞ்ஞானம்
10. கணக்கியல்
மற்றும்
பாடசாலை மட்டக்கணிப்பீடும் அறிவுறுத்தலின் படி இடம்பெறும், ஆனால்
பொறியியல் தொழில்நுட்ப பாடம், உயிரியல் தொகுதி
தொழில்நுட்ப பாடம் ஆகிய இரு
பாடங்களுக்கும் கோட்பாட்டு அறிவு மட்டுமன்றி பிரயோக
பயிற்சிகளும், தேர்ச்சி விருத்திகளும் கல்லூரிக்கு அண்மையிலுள்ள தொழில் பயிற்சி நிறுவனத்தில்
அல்லது தொழில் நுட்பக் கல்லூரிகளில்
பெற்றுக் கொடுக்கப் படும்.
இது மாணவர்களுக்கு மரபுரீதியான வகுப்பறை கற்பித்தலிலும், வெளிச் சூழலில், மாறுபட்டசூழலில்
பயிற்சி பெறவும் வசதி வழங்குகின்றது.
மேலும் பரீட்சைகள் வழமை போன்று பரீட்சை
திணைக்களத்தால் நடாத்தப்படும். ஆனால் பொறியியல் தொழில்நுட்ப
பாடம், உயிரியல் தொகுதி தொழில்நுட்ப பாடம்
ஆகிய இரு பாடங்களுக்கும் கோட்பாடுகள்
சார்ந்த பரீட்சை மட்டும் இடம்பெறும்
இதற்கு 75% புள்ளி வழங்கப்படும். மீதி
25% மான புள்ளி பிரயோக பயிற்சிக்கு
வழங்கப்படும்.
மேலும்
இத்துறையில் கல்வி பெறும் எந்த
மாணவர்களும் தோல்வியடைந்து செல்லமாட்டார்கள் ஏனெனில்,
01. இத்துறையில்
உயர்தரத்தில் சிறப்பாக சித்திபெற்றால் பல்கலைக்கழக அனுமதி பெற்று தொழில்நுட்பவியல்
பாடநெறியில் பட்டப்படிப்பை பெற முடியும்.
02. இத்துறையில்
சித்தியடைந்த மாணவர்கள் அண்மையில் உருவாக்கப்பட்டுவரும் தொழில்நுட்ப பல்கலைக்கழக கல்லூரிகளில் அனுமதி பெற்று டிப்ளோமா,
உயர் டிப்ளோமா, பட்டப்படிப்பு என்பதனைப் பெறமுடியும்.
03. மேலுள்ள
இரண்டிலும் அனுமதி பெறாதவர்கள் இலங்கை
ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியில், ஊருகொடவத்தை மோட்டார் வாகன தொழில்நுட்ப நிறுவனம்,
கட்டுநாயக்கா பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றில் அனுமதி பெற முடியும்.
04. ஏதோ
காரணத்தால் இத் துறையில் சித்தியடையாத
மாணவர்கள் தேசிய தொழில் தகைமை
(னிVஙி-111) மட்டத்துக்கு உள்வாங்கப்பட்டு
மேலும் தமது தகைமைகளை வேறு
நிறுவனங்களில் சேர்வதன் மூலம் உயர்த்திக்கொள்ள முடியும்.
எனவே இத்துறையில் கல்வி பெறும் எந்த
மாணவரும் ஏமாற்றம் அடைவதில்லை எனலாம். இப்பாடத்துறைக்கான அங்குரார்ப்பண
நிகழ்வு நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளில்
யூலை 15ம் திகதி இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கதாகும்.
கிழக்கு
மாகாணத்தில் 16 பாடசாலைகளுக்கு இப்பாடத்துறைக்கான அனுமதி கல்வி அமைச்சினால்
வழங்கப்பட்டுள்ளது. இதிலும் அம்பாறை மாவட்டத்தில்
கல்முனை ஸாஹிறாக் கல்லூரி, சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயம் (தேசிய
கல்லூரி) அக்கரைப்பற்று தேசிய கல்லூரி, அட்டாளைச்சேனை
தேசிய கல்லூரி என்பன தெரிவு
செய்யப்பட்டுள்ளது.
ConversionConversion EmoticonEmoticon