இன்று ஆண்களுக்கு சமனாக பெண்களும் சாதனை படைக்கத் துடிக்கும் காலம் ஆனால் இது இற்றைக்கு பல சகாப்தங்களுக்கு முன்னர் சாதனை படைக்க துடித்த ஒரு பெண்ணின் சரித்திரம்.
உலகின்
முதலாவது பெண் பிரதம மந்திரி
என்ற சாதனையை இலங்கையின் பிரதம
மந்திரியான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க
1960ம் ஆண்டு ஏற்படுத்தினார்.
அவருக்கு
அடுத்தபடியாக இஸ்ரேலின் பெண் பிரதம மந்திரி
கோல்டா மெய்ர் இரண்டாவது பெண்
பிரதம மந்திரி என்ற சாதனையை
1969ம் ஆண்டில் ஏற்படுத்தினார்.
விமான ஓட்டியாக அமெரிக்காவைச் சேர்ந்த 34 வயதான எமலியா ஹேர்ஹாட்
என்ற பெண்மணி 1932ம் ஆண்டு மே
மாதம் 20ம் திகதியன்று ஒரு
உலக சாதனையை ஏற்படுத்தினார்.
இவர் அன்றைய தினம் அமெரிக்காவில்
இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு ஒரு இயந்திரத்தைக் கொண்ட
Lockheed Vega 5B என்ற சிறிய விமானத்தில் அத்திலாந்திக்
சமுத்திரத்தை கடந்து சென்றார்.
ஆயினும்
சீரற்ற காலநிலையினால் அவரது விமானம் பிரான்ஸில்
இறங்குவதற்கு பதில் பிரான்ஸ¤க்கு
சற்று அப்பால் உள்ள வட
அயர்லாந்தில் பாதுகாப்பாக இறங்கியது. இந்த சாதனையை இப்பெண்
14 மணித்தியாலங்கள் மற்றும் 56 நிமிடங்களில் ஏற்படுத்தினார்.
இந்தப்
பெண் ஒரு சிறிய விமானத்தில்
இறங்குவதைப் பார்த்த அங்கிருந்தோர் நீங்கள்
எங்கிருந்து வருகிaர்கள் என்று
கேட்ட போது நான் அமெரிக்காவில்
இருந்து வருகிறேன் என்று எமலியா ஹேர்ஹாட்
பதிலளித்த போது அவர்கள் வாயடைத்து
அதிர்ச்சியில் ஆழ்ந்துவிட்டனர்.
இவர் இறங்கிய இடமான வட
அயர்லாந்தின் டெரியில் இருந்து வடபகுதியில் இருக்கும்
கல்மொரே எனுமிடத்தில் எமலியா ஹேர்ஹாட் என்ற
ஒரு சிறிய நூதனசாலை அமைக்கப்பட்டிருப்பது
குறிப்பிடத்தக்கது.
தனது கணவருடன்
இவர் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டின் மனைவியான எலினோருக்கும் விமானம் ஓட்டும் பயிற்சியை
அளித்தார்.
இதன் மூலம் அமெரிக்க ஜனாதிபதியின்
குடும்பத்துடன் இவர் நெருக்கமான நட்புறவைக்
கொண்டிருந்தார்.
1897ம்
ஆண்டு ஜூலை 24ம் திகதியன்று
சென்சஸ் நகரில் பிறந்த எமலியா
ஹேர்ஹாட், இவரது தந்தை ரயில்
சேவையில் ஒரு சட்டத்தரணியாக இருந்தார்.
19 வயதான போது இவர் பெண்சில்வேனியாவில்
கல்வி கற்றுக் கொண்டிருந்தார்.
அப்போதே
அவருக்கு விமானம் ஓட்டுவதில் ஆர்வம்
இருந்தது. பிறகு அவர் நிவ்யோர்கில்
உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் வைத்தியக்கல்லூரி மாணவியாக சேர்ந்து கொண்டார்.
என்றாலும்
பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக இவர் நிவ்யோர்கில்
இருந்து கலிபோனியாவுக்கு இடம்பெயர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் சிறு
தொழில்களை புரிந்து அதன் மூலம் கிடைத்த
வருமானத்தைக் கொண்டு விமானம் ஓட்டும்
பயிற்சியைப் பெற்றார்.
கணவர் உட்பட தன் சகாக்களுடன்
1972ம்
ஆண்டு எமலியா ஹேர்ஹாட் தனது
மூத்த சகோதரி மியுரியல் மற்றும்
தாயிடமிருந்து கிடைத்த பொருளாதார உதவியை
பெற்று அவர் ஒரு சிறிய
விமானத்தை தனக்கென சொந்தமாக வாங்கினார்.
1931ம்
ஆண்டில் இவர் ஜோர்ஜ் பி.
புட்னம் என்பவரை திருமணம் செய்து
கொண்டார். இவர்களின் திருமணம் நடைபெற்ற போதிலும் இவர் தொடர்ந்தும் விமானம்
ஓட்டும் பணியை கைவிடவில்லை. அதையடுத்து
விமானத்துறையிலும் இவர் சாதனை படைத்தார்.
தற்போது
விமானப்படை விமான ஓட்டிகள் அணிவது
போன்ற காற்சட்டையும், சேர்ட்டும் ஒன்றாக தைக்கப்பட்ட ஆடையை
இவர்தான் முதன் முதலில் விமான
ஓட்டிகளுக்கு வடிவமைத்து அறிமுகம் செய்து வைத்தார்.
அத்திலாந்திக்
சமுத்திரத்தை தன்னந்தனியாக விமானத்தில் கடந்து 1927ம் ஆண்டில் சாதனை
படைத்தவர் சார்ள்ஸ் லின்பேர்க் என்ற விமான ஓட்டியாவார்.
அவரது பாதையில் எமலியா ஹேர்ஹாட், சுய
முயற்சியின் மூலம் புதிய சாதனையைப்
படைத்தார். இதே சாதனையை எமலியா
ஹேர்ஹாட் 1932ல் ஏற்படுத்தினார்.
ஒரு ஆணாள் மட்டுமல்ல அத்திலாந்திக்
சமுத்திரத்தை பெண்ணாலும் கடக்க முடியுமென்ற இவரது
மனோ தைரியம் இவரது சாதனைக்கு
வித்திட்டது எனலாம்.
தனியாக
அத்திலாந்திக் சமுத்திரத்தை கடந்த விமானத்துடன்
இவர் இரண்டு தடவைகள் திருமணம்
செய்து கணவன்மாரை விவாகரத்து செய்தவர்.
1937ம்
ஆண்டில் முதல்தடவையாக எமலியா ஹேர்ஹாட், உலக
நாடுகள் அனைத்தின் மீதும் பறக்கும் ஒரு
விமான சாதனையை ஏற்படுத்தும் பலப்பரீட்சையில்
இறங்கினார். இந்த பயணத்திற்கு பிரட்ரிக்
நுனான் என்பவர் விமானப் பாதை
வழிகாட்டியாக எமலியா ஹேர்ஹாட் பயணத்தை
மேற்கொண்டார்.
ஜூலை 2ம் திகதியன்று இவர்கள்
பயணித்த விமானம் 22ஆயிரம் மைல்களை கடந்து
சென்று கொண்டிருந்த போது திடீரென்று விமான
ராடாரில் இருந்து மறைந்துவிட்டது. இவர்களது
விமானம் எங்கு விபத்துக்குள்ளானது என்பது
இது வரையில் கண்டுபிடிக்காத இரகசியமாக
இருக்கின்றது.
எமலியா
ஹேர்ஹாட், ஏதாவது ஒரு இனந்தெரியாத
தீவில் இறங்க முற்பட்ட போது
விமானம் விபத்துக்குள்ளானதா? அல்லது இரண்டாவது உலக
மகா யுத்தம் உக்கிரமாக நடந்து
கொண்டிருந்த போது எமலியா ஹேர்ஹாட்
மேற்கத்திய உளவாளி என்று நினைத்து
ஜப்பானியர் இவரை சிறைப்பிடித்தார்களா என்பது
இன்றும் புரியாத புதிராக இருந்து
வருகின்றது.
இவரது மரணத்திற்கு பின்னர் கணவர் ஜோர்ஜ்.
பி. புட்டின் 1939ம் ஆண்டில் எமலியா
ஹேர்ஹாட்டின் வாழ்க்கை வரலாற்றை நூலாக வெளியிட்டார்.
ConversionConversion EmoticonEmoticon