செய்வாயில் ஆய்வு செய்யும் இயந்திரத்தின் இரண்டாவது துளை

செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி இயந்திரம் அங்குள்ள பாரையில் இரண்டாவது முறை துளையிட்டு மாதிரிகளை பெற்றுள்ளது. இந்த துளையிலிருந்து பெறப்பட்ட துகள்களை பகுப்பாய்வுக்காக கியூரியா சிட்டியில் இருக்கும் ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்பட விருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா குறிப்பிட்டுள்ளது.


கியூரியாசிட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமையே செவ்வாயில் மீண்டும் ஒருமுறை துளையிட்டது. இது ஒருமாத இடைவெளிக்குப் பின் கியூரியாசிட்டியின் பிரதான ஆய்வு செயற்பாடாக அமைந்தது. மூன்று மாதங்களுக்கு முன் கியூரியாசிட்டி முதல் முறை துளையிட்ட இடத்திலிருந்து சுமார் ஒன்பது அடிக்கு அப்பால் இரண்டாவது துளையை இட்டுள்ளது.

முதல் துளையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளைக் கொண்டு மேற்கொள்ளப் பட்ட பகுப்பாய்வில் செவ்வாயில் பண்டைய காலத்தில் உயிர்வாழ சாத்தியமான சூழல் இருந்தது உறுதி செய்யப் பட்டது. இந்த கண்டுபிடிப்பை உறுதி செய்யும் முயற்சியாகவே விஞ்ஞானிகள் பாறையிலிருந்து மாதிரிகளைப் பெற்றுள்ளனர். கியூரியாசிட்டி இயந்திரம் விரைவில் தற்போதிருக்கும் இடத்திலிருந்து தனது பிரதான இலக்கை நோக்கி பயணத்தை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளது. கியூரியாசிட்டி ஒரு மலைக்குன்றை நோக்கி நகர்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Previous
Next Post »

More News