பொன்னாடை பேசினால் எவ்வாறு இருக்கும் (சுயரூபக் கோவை)



பெயர் : பொன்னாடை


தொழில் : மேடைகளில் தோள்களை அலங்கரிப்பது

உண்மையான தொழில் : கெளரவம் அளித்தல்

சைட் பிஸினஸ் : போர்த்தியபின் சுழற்சியாக மீள்

விற்பனையாதல்

வருமானம் : கலைஞர்களுக்கு உதவும் கொடை வள்ளல்களின் தாராள மனது

பொழுது போக்கு : குளிர்கால இரவுகளில் போர்வையாவது

அதிகம் இரசிப்பது : அரசியல்வாதியின் தோள்களில் அமர்ந்திருப்பது

அசைக்க முடியாத பலம் : கலைஞர் கெளரவிப்பு, கட்சி மாநாடு, நூல் வெளியீடுகள்

அசைக்கக் கூடிய பலம் : புரவலர்கள், பிரமுகர்கள் கைகளை விரித்தல்

நண்பர்கள் : தன்னை அதிகமாக வாங்கி பிறருக்குக் கெளரவமளிப்போர்

எதிரிகள : தனக்கு எதிராக விமர்சிப்போர், கட்டுரை எழுதுவோர்

மகிழ்ச்சி : தன்னால் பிரபல்யமாகும் உண்மையான கலையுலக, அரசியல் பிரமுகர்கள்

துக்கம் : தன்னைப் போர்த்திப் பிரபல்யமாகும் தகுதியில்லா கலையுலக, அரசியல் பிரமுகர்கள்

ஏக்கம் : தகுதியில்லாதவர்கள் தோள்களிலும் ஏறும் நிலை ஏற்பட்டமை

தவறவிட்டது: அமரர்களாகிவிட்ட கெளரவமான பலரின் தோள்களை அலங்கரிக்காமை

நிறைவேறாத ஆசை : மரணச் சடங்குகளில் மட்டுமே தனக்கு இடமில்லாமை

நிறைவேறிய ஆசை : ஆலயக் குருமாரின் இடுப்பிலிருந்து தலைக்கும் சென்றமை

மிகவும் பிடித்தது : கண்ணைக் கவரும் ஜரிகைப்பட்டு

சாதனை : தண்ணீரில்லாத ஊர்களிலும் தன்னை விரும்பும் பிரமுகர்கள்

அதிக மரியாதை வைத்திருப்பது : தன் மதிப்பைப் புரிந்து நடப்போர் மீது

மனம் வெதும்பிய சந்தர்ப்பம் : ஒரு மேடையில் ஒரே பொன்னாடையை மூவருக்குப் போர்த்தியமை

எதிர்கால இலட்சியம் : கெளரவமானவர் தோள்களை மட்டும் அலங்கரிப்பது

கோபம் கொள்வது : பொன்னாடை என்று கூறி நூல் வேட்டிச் சால்வையைப் போர்த்துவது

எதிர்பார்த்துக் கொண்டிருப்பது : ஒரே மேடையில் ஆயிரம் பேரின் தோள்களில் அமர்வது

எதிர்பாரா சம்பவம் : மாபெரும் விழாவில் போர்த்தியபோது நடுவே கிழிந்துவிட்டமை.
Previous
Next Post »

More News