பாகிஸ்தானில்
ராணுவ தளபதியாக இருந்த முஷரப் 1999-ம்
ஆண்டு ராணுவ புரட்சி நடத்தி
ஆட்சியைக் கைப்பற்றி பின்னர் தேர்தல் நடத்தி
ஜனாதிபதியானார். அவரது ஆட்சிக் காலத்தில்
தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் தீவிரவாதிகளால்
குண்டு வைத்து கொலை செய்யப்பட்டார்.
இறுதியாக
நடைபெற்று தேர்தலில் தோல்வியடைந்த முஷரப் பாகிஸ்தானை விட்டு
வெளியேறி சவுதிஅரேபியா மற்றும் இங்கிலாந்தில் தஞ்சம்
அடைந்தார். இந்த நிலையில் வருகிற
மே மாதம் 11ஆம் திகதி
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்
தேர்தலில் போட்டியிடுவதற்காக முஷரப் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச்மாதம் 24ஆம்
திகதி பாகிஸ்தான் திரும்பினார்.
நேற்று
அவர் கராச்சியில் முதல் முறையாக நிருபர்களை
சந்தித்து பேட்டி அளித்தபோது இந்தியாவுடன்
கார்கில் போர் நடத்தியதற்கு பெருமைப்படுவதாக
தெரிவித்தார்.
பாகிஸ்தான்
பாராளுமன்ற தேர்தலில் முஷரப் சித்ரால் தொகுதியில்
போட்டியிடுவதற்காக நேற்று(28.03.2013) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
ConversionConversion EmoticonEmoticon