இரும்புச்
சீமாட்டி என அழைக்கப்படும் பிரிட்டனின்
முன்னாள் பிரதமர் மார்க்கிரட் தட்சர்
தனது 87 ஆவது வயதில் நேற்று
கால மானார்.
பக்கவாத
நோய் தாக்கியதையடுத்து அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக
அவ ரது பேச்சாளர் ஒருவர்
குறிப்பிட்டார். பிரிட் டனின் முதல்
பெண் பிரதமரான தட்சர் 1979 ஆம் ஆண்டு தொடக்கம்
1990 ஆம் ஆண்டு வரையான காலத்தில்
பிரதம ராக செயற் பட்டார்.
அத்துடன் பிரிட்டன் பிரதமராக நீண்ட காலம் பதவி
வகித்தவர் என்ற பெருமையும் தட்சருக்கு
உண்டு.
தட்சரின்
மரணத்திற்கு கவலை வெளியிட்டுள்ள பிரிட்டன்
பிரதமர் டேவிட் கெமருன், ‘சிறந்த
பிரஜை’ என வர்ணித்தார். பிரிட்டன்
மகாராணியின் பேச்சாளரும் கவலையை வெளியிட்டி ருந்தார்.
இந்நிலையில் தட்சரின் இறுதிக் கிரியை மகாராணியின்
தாய் மற்றும் இளவரசி டயானாவின்
அந்தஸ்திலான அரச மரியாதையுடன் நடத்தப்படும்
என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின்
பலம் வாய்ந்த பிரதமராக இருந்த
தட்சரின் ஆட்சியிலேயே 1979 ஆம் ஆண்டு பொக்லாந்து
தீ உரிமை தொடர்பிலான ஆர்ஜன்டீனாவுடனான
யுத்தத்தில் பிரிட்டன் வெற்றி பெற்றது.
1979 ஆம்
ஆண்டு பிரதமராக பதவி யேற்றபின் அவர்
பிரிட்டன் அரசியல் அரங்கில் பல
மாற்றங்களை ஏற்படுத்தினார். சர்வதேச அரங்கிலும் பலம்
வாய்ந்த பிரிட்டன் தலைவராக அவர் இருந்து
வந்தார். இதனாலேயே அவரை சோவியத் ஊடகங்கள்
இரும்புச் சீமாட்டி என அழைத்தன.
ConversionConversion EmoticonEmoticon