ஆண், பெண் வேறுபாடு கருவிலிருந்து கண்டுபிடிக்கப்படுகிறது


இந்தியா போன்ற நாடுகளில் ஆண், பெண் என்று வேறுபடுத்தி பார்ப்பது கருவிலிருந்தே தொடங்கி விடுகின்றது என்ற அதிர்ச்சித் தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


அமெரிக்காவின் மிக்சிகன் யுனிவர்சிட்டியைச் சேர்ந்த லீ லக்டவலாவும், கலிபோர்னியா யுனிவர்சிட்டியைச் சேர்ந்த பிரஷாந்த் பரத்வாஜும் இணைந்து 30,000க்கும் மேற்பட்ட இந்திய பெண்களிடம் இது குறித்து ஆராய்ச்சி செய்ததில் கருவில் இருப்பது ஆண் என்ற பட்சத்தில் தகுந்த மருத்துவ கவனிப்பினை எடுத்துக் கொள்கின்றார்கள். கருவிலிருப்பது பெண்ணாக இருந்தால் கலைத்துவிடவும் துணிகிறார்கள்.

இது தண்டனைக்குரிய குற்றம் என்ற போதிலும் இந்த தவறு நடந்து கொண்டு தான் இருக்கிறது என்று இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சீனா, பங்களோஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் இந்த நடைமுறைகள் காணப்படுகின்றன. ஆனால் ஸ்ரீலங்கா, தாய்லாந்து, கானா போன்ற நாடுகளில் இது போன்ற செயல்கள் நடைபெறுவதில்லை. இவை அனைத்துமே ஆணாதிக்க நாடுகளாகும்.

குழந்தை வளரும் விதமே பிற்காலத்தில் அதற்கு துணைபுரியும் என்பது போன்றே கருவிலிருக்கும் குழந்தை குறித்து அக்கறை கொள்வது அதன் எதிர்காலத்திற்கு உதவும் என்று லக்டவாலா கூறுகின்றார்.
Previous
Next Post »

More News