போலி ஹஜ் முகவர்களை நம்பி ஏமாறாதீர்கள்


  
* 2800 கோட்டாக்களுக்கே அனுமதி
* முதற்தடவை செய்வோருக்கு முன்னுரிமை
* எந்த ஹஜ் முகவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை
*  6000 போர் விண்ணப்பித்துள்ளனர்
எம். எஸ். பாஹிம்
ஹஜ் யாத்திரை செல்வதற்காக இதுவரை 6600 பேர் விண்ணப் பித்துள்ளதாகவும், இதில் தகுதி யானவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் சிரேஷ்ட அமைச்சர் . எச். எம். பெளசி தெரிவித்தார்.


ஹஜ் முகவர்களுக்கு இதுரை அனுமதி வழங் கப்படாததால் முகவர்களுக்கு பணம் கொடுத்து எவரும் ஏமாற வேண்டாம் எனவும் ஹஜ் யாத்திரிகளிடம் கூடுதல் பணம் அறவிட்டு உரிய சேவை வழங்காத முகவர் குறித்து எழுத்து மூலம் அறிவித்தால் அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட் டார்.

சிரேஷ்ட அமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் 2013 ஹஜ் யாத்திரை குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது:

ஹஜ் யாத்திரை செல்வது தொடர்பில் முஸ் லிம்களின் ஆர்வம் அதிகமாக உள்ளது. முதன் முறையாக ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கே இம்முறையும் முன்னுரிமை வழங்கப்படும். ஹஜ் யாத்திரை செல்வதற்காக இதுவரை 6600 பேர் பதிவு செய்துள்ளனர். ஹஜ் யாத்திரை செல்ல விரும்பும் அனைவரும் 25 ஆயிரம் ரூபா செலுத்தி தம்மை பதிவது கட்டாயமாகும். இம்முறையும் 2800 பேருக்கே ஹஜ் கடமையை நிறைவேற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எமக்குரிய கோட்டாவை அதிகரிப்பது குறித்து சவூதி ஹஜ் விவகார அமைச்சருடன் விரைவில் பேச்சு நடத்த உள்ளேன்.

பதிவு செய்துள்ளவர்களில் தகுதியானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் இதுவரை எந்த முகவருக்கும் ஹஜ் யாத்திரைக்கு ஆட்களை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. எனவே யாரும் முகவர்களுக்கு பணம் வழங்கி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். கடந்தமுறை ஹஜ் முகவர்கள் கூடுதல் பணம் அறவிட்டதாகவும் யாத்திரிகர்களுக்கு ஒழுங்கான சேவை வழங்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் எவரும் எமக்கு எழுத்து மூலம் அது குறித்து முறைப்பாடு செய்ய முன்வரவில்லை. சிலர் முறையிட தாயாரான போதும் முகவர்கள் சிலர் கெஞ்சிக் கூத்தாடி அதனை நிறுத்தியுள்ளனர்.

ஹஜ் முகவர்கள் குறித்து முறைப்பாடுகள் இருந்தால் தற்பொழுது கூட எமக்கு எழுத்து மூலம் அறிவிக்க முடியும். 2013 ஆம் ஆண்டிற்கான ஹஜ் முகவர்களைத் தெரிவு செய்யும் போது இது குறித்து கவனித்து தகுதியானவர்களை தெரிவு செய்யலாம். முகவர்கள் தாம் வழங்கும் பணத்திற்கு ஏற்ப உரிய சேவை வழங்க வேண்டும். இது குறித்து நாம் அவதானமாக இருப்போம்.
Previous
Next Post »

More News