உமர் ரலி கூறினார்கள்:
எனது மகள் ஹப்ஸா (ரலி)
அவர்கள் தன் கணவர் இறந்து
விட்டதால் விதவையானபோது, நான் உஸ்மான் (ரலி)
அவர்களைச் சந்தித்து “நீங்கள் விரும்பினால் உங்களுக்கு
என் மகள் ஹப்ஸாவைத் திருமணம்
செய்து தருகிறேன்” எனக் கூறினேன்.
அதற்கவர்கள் “நான் யோசித்துக் கூறுகிறேன்”
என்று கூறிச் சில தினங்களின்
பின் என்னைச் சந்தித்து “இந்நாளில்
திருமணம் முடிப்பதற்கு எனக்கு யோசனை இல்லை”
என்று கூறினார்கள். பிறகு நான் அபூபக்கர்
(ரலி) அவர்களைச் சந்தித்து “நீங்கள் விரும்பினால் எனது
மகள் ஹப்ஸாவை உங்களுக்கு திருமணம்
செய்து தருகிறேன்” எனக் கூறினேன்.
அப்போது
அவர் ஏதும் கூறாமல் மெளனமாக
இருந்துவிட்டார்கள். நான் உதுமான் (ரலி)
அவர்களுடன் கோபமடைந்ததைவிட அதிகம் அபூபக்கர் (ரலி)
அவர்களுடன் கோபமடைந்தேன்.
சில நாட்கள் கழித்து (நபி)
(ஸல்) அவர்கள் தனக்காக ஹப்ஸாவை
பெண்கேட்டார்கள். நான் நபியவர்களுக்கு திருமணம்
முடித்துக் கொடுத்தேன். பிறகு அபூபக்கர் (ரலி)
என்னைச் சந்தித்து “நீங்கள் ஹப்ஸாவைப் பற்றி
என்னிடத்தில் கூறியபோது நான் ஏதும் விடையளிக்காதது
உங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்குமல்லவா?” எனக் கேட்க
நான் “ஆம்” என்றேன். அதற்கவர்கள்
“ரஸ¤ல் (ஸல்) அவர்கள்
ஹப்ஸாவைத் (திருமணம் முடித்துக் கொள்வதைப்) பற்றிக் கூறியதை நான்
அறிந்திருந்தேன்.
நபியவர்களின் இரகசியத்தை வெளிப்படுத்தவும் முடியாது. இதுவே நீர் கேட்ட
விடயத்தில் பதில் கூற முடியாமல்
என்னைத் தடுத்தது. ரஸ¤ல் (ஸல்)
அவர்கள் ஹப்ஸாவை திருமணம் முடிக்காமலிருந்தால்
நான் முடித்திருப்பேன்” எனக் கூறினார்கள்.
அறி: அப்துல்லாஹ் இப்னுஉமர்
நூல்: புஹாரி
கலாபூஷணம்:
ஹாரிஸ்
மெளலவி (கபூரி)
ConversionConversion EmoticonEmoticon