பணியிடங்களில்,
பொது இடங்களில் மட்டுமல்லாது பஸ், ரயில் போன்ற
வாகனங்களிலும் கூட பெண்கள் மீதான
பாலியல்
வன்முறைகள் பெருகிவருகின்றன நிலையில் பாலியல் வன்முறையில் இருந்து
தப்பிக்க உதவும் பெண்களுக்கான நவீன
உள்ளாடையை சென்னையை சேர்ந்த பெண் பொறியியலாளர்
உருவாக்கியிருக்கியுள்ளார்.
பாலியல்
வன்முறைகளில் ஈடுபடுவோருக்கான தண்டனையை அதிகரிக்க சட்டம் கொண்டு வந்தபோதும்,
இத்தகைய குற்றங்கள் நடக்காத நாளே இல்லை.
இந்த நிலையில், பெண்கள் பாலியல் வன்முறையில்
சிக்காமல் தங்களைக் காத்துக்கொள்கிற வகையில் அதிநவீன பாதுகாப்பு
அம்சங்களைக்கொண்ட உள்ளாடையை 3 என்ஜினீயர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்து உள்ளனர்.
இந்த உள்ளாடை ஜி.பி.எஸ். என்னும் குளோபல்
பொசிஷனிங் சிஸ்டம், ஜி.எஸ்.எம்.
என்று அழைக்கப்படும் குளோபல் சிஸ்டம் பார்
மொபைல் கொம்யூனி கேசன்ஸ், பிரசர் சென்சார் கருவிகளை
இணைத்து தயாரிக்கப் பட்டுள்ளது இதற்கு சொசைட்டி ஹார்ன
ஸிங் எக்யூப்மென்ட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதில் இடம் பெற்றுள்ள பிரசர்
சென்சார் கருவி பெண்ணுக்கு பாலியல்
வன்முறை நடக்கும் வாய்ப்பு உள்ளபோது, இதுபற்றி அவரது பெற்றோருக்கு, பொலிசுக்கு
3 ஆயிரத்து 800 கிலோவாட் அளவிலான அதிர்வலைகளை எஸ்.எம்.எஸ். அலர்ட்டுகளாக
அனுப்பி அவர்களை உஷர்படுத்தி விடும்
என்று இந்த நவீன உள்ளாடை
தயாரிப்பில் பங்கு பெற்ற என்
ஜினீயர் மனிஷ மோகன் கூறியுள்ளார்.
ஒரு முறையல்ல 82 முறை இது அதிர்வலைகளை
வெளிப்படுத்துகிற சக்திவாய்ந்த தாக இருக்கும் எனவே
வன்முறைக்கு ஆளாக்க முயற்சிக்கிறபோது, இதில்
உள்ள பிரசர் சென்சார்கள் இயங்கத்தொடங்கி
விடும். இதனால் குற்றவாளியான நபரை
இது கடுமையான அதிர்வலைகள் மூலம் தாக்குவதுடன் அவசர
பொலிஸ் எண் 100 போன்றவற்றுக்கும், அந்தப்
பெண்ணின் பெற்றோருக்கும் உடனடியாக குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.)
அனுப்பி வைக்கும் என்றார்.
இந்த மனிஷா மோகன் சென்னை
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்தவர். இவர் தனது சகபொறியியலாளர்களான
ரிம்பி திரிபாதி, நீலாத்ரி பாசு பால் ஆகியோருடன்
சேர்ந்துதான் இந்த உள்ளாடையை உருவாக்கியுள்ளார்.
இது இந்த மாதம் விற்பனைக்கு
சந்தைக்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கினறன.
ConversionConversion EmoticonEmoticon