கிராண்ட்ஸ்லாம்
போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் பகிரங்க
டென்னிஸ் போட்டி பாரீசில் அடுத்த
மாதம் (மே) 26ம் திகதி
முதல் ஜூன் 9ம் திகதி
வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான ஒட்டுமொத்த
பரிசுத்தொகை 17.6 சதவீதம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதன்படி
இந்த ஆண்டுக்கான போட்டியில் மொத்தம் ரூ. 157 கோடி
பரிசுத் தொகையாக வழங்கப் படுகிறது.
இது 2012ம் ஆண்டை விட
ரூ. 23 கோடி கூடுதலாகும். ஒற்றையர்
பிரிவில் சம்பியன் பட்டம் வெல்லும் வீரர்,
வீராங்கனைக்கு தலா ரூ. 10 3/4 கோடி
வீதம் (கடந்த ஆண்டு ரூ.
9 கோடி) கிடைக்கும்.
மேலும்
2வது 3வது, 4வது சுற்றுகளில்
தோற்று வெளியேறும் வீரர்களுக்கான பரிசுத்தொகையும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2016ம்
ஆண்டு பிரெஞ்ச் பகிரங்கத்திற்குள் மேலும் ரூ. 71 கோடி
பரிசுத்தொகை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ConversionConversion EmoticonEmoticon