நாஸா புதிய விண்கலத்தை அனுப்புகிறது வேற்று கிரகத்திற்கு


பூமியை ஒத்த வேற்று கிரகங்களை கண்டறியும் திட்டத்தின் கீழ் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா புதிய விண்வெளி தொலைநோக்கி ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.


இதன்படி எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு இரண்டு விண்கலங்களை ஏவ உள்ளது. இதில் டெஸ் என்று அழைக்கப்படும் வேற்று கிரக ஆய்வு செயற்கைக் கோள் மற்றும் நைகர் என அழைக்கப்படும் நியூட்ரோன் நட்சத்திர உள் கலவை செயற்கைக் கோளையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு நாஸா நிறுவிய கெப்லர் விண்வெளி தொலைநோக்கி வெற்றிகரமாக நூற்றுக்கணக்கான வேற்று கிரகங்களை கண்டுபிடித்துள்ளது. இதில் கெப்லர் தொலைநோக்கி கண்டுபிடித்த 2,740 வேற்று கிரகங்களும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதன் தொடர்ச்சியாகவே டெஸ் விண்கலம் அனுப்பப்படவுள்ளது.

டெஸ் விண்கலம் முன்னர் அனுப்பப்பட்ட விண்கலங்களை விடவும் 400 மடங்கு அவதானிப்பு திறன் கொண்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்கலம் முழு வானையும் ஒரே நேரத்தில் அவதானிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்படவுள்ளது. இந்த விண்கலம் தயாரிக்க 200 மில்லியன் டொலருக்கு உட்பட்ட தொகையை செலவிட நாஸா திட்டமிட்டுள்ளது.
Previous
Next Post »

More News